சென்னை மேடவாக்கம், நன்மங்கலம் பகுதியில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், 2 நாட்களுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்மங்கலத்தைச் சேர்ந்த சுஜித் (32) என்பவருக்கும் அவரது மனைவி பிரியாவுக்கும் கடந்த 11ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதனால், மன வருத்தமடைந்த பிரியா, தனது மகனை அழைத்துக்கொண்டு கோபமாகத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, 12ஆம் தேதி பிரியா தனது கணவர் சுஜித்திற்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. இதனால், சுஜித் குறித்துத் தெரிந்துகொள்ள தனது தாயாரை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு பிரியா கூறியுள்ளார். வீட்டிற்குச் சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்ததால், சுஜித் வெளியே எங்காவது சென்றிருக்கலாம் என அவர்கள் நினைத்துள்ளனர்.
மறுநாள் பிரியா மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து, உடனடியாக மேடவாக்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுஜித் தனது மனைவியின் சால்வையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் கிடந்துள்ளார்.
பின்னர், சுஜித்தின் உடலைப் பிரேத பரிசோதனைக்காகத் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).