கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் சேர்ந்த ரஞ்சித்குமார். தனியார் நிறுவனர். இவர் பழனிசாமி என்பவருக்காக பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
லஞ்சம் கேட்ட தாசில்தார்
இந்த விண்ணப்பத்தை கீழ் நிலை அலுவலர்கள் சரி பார்த்த நிலையில் தாசில்தார் ரமேஷ் குமாரின் இறுதி ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தது. இதனால் ரஞ்சித் குமார் பேரூர் தாசில்தார் ரமேஷ்குமாரை நேரில் சந்தித்து, சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்கும்படி கேட்டு உள்ளார். அப்பொழுது ரமேஷ் குமார் சான்றிதழ் வழங்கும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
அதற்கு ரஞ்சித்குமார் தன்னால் அவ்வளவு பணம் தரம் இயலாது என்று தெரிவித்தார். ஆனாலும் ரூபாய் ஐம்பதாயிரம் கொடுத்தால் மட்டும் சான்றிதழ் தர முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது.
2 பேர் சஸ்பெண்ட்
இது குறித்து ரஞ்சித் குமார் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்தார். அதன் பெயரில் காவல் துறையினர் ரஞ்சித் குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். இந்த ரூபாய் நோட்டுக்களுடன் ரஞ்சித் குமார் சம்பவத்தன்று பேரூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.
அவர் அந்த ரூபாய் நோட்டுக்களை தாசில்தாரிடம் உதவியாளரான சரவணன் இடம் கொடுத்தார். அதை அவர் வாங்கினார் உடனே அங்கு மறைந்து இருந்தால் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தாசில்தார் அறைக்குள் சென்று தாசில்தார் ரமேஷ் குமார், உதவியாளர் சரவணன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான பேரூர் தாசில்தார் ரமேஷ் குமார், உதவியாளர் சரவணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உத்தரவிட்டு உள்ளார்.