தமிழ்நாடு

CBSE 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.17ல் தேர்வுகள் தொடக்கம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு இரண்டு கட்டத் தேர்வுகள் பிப். 17 முதல் தொடங்குகிறது.

CBSE 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.17ல் தேர்வுகள் தொடக்கம்!
CBSE 10, 12 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்.17ல் தேர்வுகள் தொடக்கம்!
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அனைத்துப் பொதுத் தேர்வுகளும் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு (2026):

CBSE 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதல்கட்டப் பொதுத் தேர்வு: 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெறும்.

இரண்டாம் கட்டப் பொதுத் தேர்வு: 2026ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும்.

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (2026):

CBSE 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு கட்டத் தேர்வுகள் முடிந்த 10வது நாளில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும் எனவும் CBSE நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.