தமிழ்நாடு

12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!

வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு பாலியல் தொல்லை கொடுத்த மேளக்காரர் மணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!
12 வயது சிறுவனைப் பிச்சை எடுக்க வைத்து பாலியல் தொல்லை - மேளக்காரர் மீது போக்சோ வழக்கு!
சென்னை வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் கடைக்குச் சென்ற 12 வயது சிறுவனை மிரட்டிப் பிச்சை எடுக்க வைத்ததோடு, பாலியல் ரீதியாகவும் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 52 வயது பாட்டி ஒருவர், தனது 12 வயதுப் பேரனை கடந்த 20ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள கடைக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பாட்டி பல இடங்களில் தேடியுள்ளார். அப்போது ஒருவர் அளித்த தகவலின் பேரில், தனது பேரன் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருப்பது தெரிய வந்தது.

பாட்டி வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்குச் சென்றபோது, சிறுவனை கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்று விட்டது தெரிய வந்தது. அங்கு குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் மூலம் தனது பேரனைச் சந்தித்த பாட்டியிடம், சிறுவன் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மேளம் அடிக்கும் மணி என்பவர் தன்னை மிரட்டி ரயில் நிலையத்தில் பிச்சை எடுக்க வைத்ததாகச் சிறுவன் கூறியுள்ளார். மேலும், அந்த மணி என்பவர் தன்னைப் பாலியல் ரீதியிலாகத் துன்புறுத்தியதோடு, கொலை மிரட்டலும் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, சிறுவனின் பாட்டி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மேளம் அடிக்கும் மணி மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொடூரக் குற்றத்தைச் செய்துவிட்டுத் தலைமறைவாக உள்ள மணியைத் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.