போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை நிலுவையில் வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்குப் புதிய சிக்கல் வரவிருக்கிறது. வாகனக் காப்பீட்டை (இன்சூரன்ஸ்) புதுப்பிக்கும்போது, நிலுவையில் உள்ள அபராதத் தொகையையும் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும் என்ற நடைமுறையை அமல்படுத்தப் போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து துறைக்கு விரைவில் பரிந்துரைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலும், விதிமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும், அபராதத் தொகைகள் முறையாக வசூலிக்கப்படாமல் நிலுவையிலிருந்து வருகின்றன.
ஏற்கனவே உள்ள நடைமுறைகள்:
தற்போது, வாகனங்களை விற்பனை செய்யும்போதும், உரிமையாளர் பெயர் மாற்றம் செய்யும்போதும், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும்போதும், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிலுவையில் உள்ள அபராதத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை ஓரளவு பலன் அளித்தாலும், இன்னும் பல கோடி ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் உள்ளது.
புதிய திட்டம் என்ன?
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை வகுத்துள்ளனர். அதாவது, வாகன ஓட்டிகள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தங்கள் வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்கச் செல்லும்போது, அவர்களின் வாகன எண்ணில் எவ்வளவு அபராதத் தொகை நிலுவையில் உள்ளது என்பதைச் சரிபார்க்கும் வசதியை உருவாக்க உள்ளனர். அந்தத் தொகையைச் செலுத்தினால் மட்டுமே இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் நடைமுறையைக் கொண்டுவர ஆலோசனை நடந்து வருகிறது.
இதற்காக, போக்குவரத்து துறை மற்றும் தனியார் இன்சூரன்ஸ் அதிகாரிகளுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், நிலுவையில் உள்ள அபராதத் தொகையை முழுமையாக வசூலிக்க முடியும் என்று போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த யோசனைக்கு ஒப்புதல் கிடைத்தவுடன், இதுகுறித்துத் தமிழக போக்குவரத்து துறைக்கு விரைவில் பரிந்துரை அனுப்பப்படும்.