வங்கக்கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலால் தமிழ்நாட்டில் கனமழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன், அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் அவசர ஆலோசனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள்
'டிட்வா' புயல் காரணமாகத் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தச் சூழலில், புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டிட்வா' புயல் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க 14 மாவட்ட கலெக்டர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறேன். 16 மாநில பேரிடர் மீட்பு படைகளும் 12 தேசிய பேரிடர் மீட்பு படைகளும் கடுமையான மழைப்பொழிவு ஏற்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அனைத்துத் துறைகளும் முறையான திட்டமிடுதலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்திட வேண்டும். பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையினைப் பின்பற்றி, அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7