திருப்பத்தூர் அடுத்த நரவந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு சிறுமி, டிபன் பாக்ஸைத் தொலைத்ததற்காகத் தாய் திட்டியதால் பயந்துபோய் எலி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நரவந்தம்பட்டியைச் சேர்ந்த பழனி மற்றும் ரம்யா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் 6 ஆம் வகுப்பிலும், இளைய மகள் 5 ஆம் வகுப்பிலும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
நேற்று (ஆகஸ்ட் 1) இளைய மகள் பள்ளியில் தனது டிபன் பாக்ஸைத் தொலைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. டிபன் பாக்ஸ் இல்லாமல் வீட்டிற்கு வந்த மகளைக் கண்ட தாய் ரம்யா, தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று ஆத்திரத்தில் திட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன அந்தச் சிறுமி, பாட்டி வீட்டில் வைத்திருந்த எலி பேஸ்ட்டை சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டுவிட்டாள். பின்னர், தான் எலி பேஸ்ட் சாப்பிட்டதை தாயாரிடம் கூறிய நிலையில், அதிர்ந்துபோன ரம்யா உடனடியாகச் சிறுமியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்குச் சிறுமிக்குச் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் திட்டியதால் பயந்துபோன சிறுமி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எல்லா பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்).