சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று குறிப்பிட்டுப் புதுமணத் தம்பதிகளுக்குப் அறிவுரைகளை வழங்கினார்.
வெற்றிக்குக் காரணம் துணைவியாரே!
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "என்னுடைய வெற்றிக்குப் பின்னால் இருப்பது எனது மனைவிதான். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது பெண் தான். என் வெற்றிக்குக் காரணமும் பெண்தான். ஓராண்டு காலம் மிசாவில் சிறையில் இருந்தபோது பொறுமையாக இருந்தவர் அவர். எவ்வளவு கொடுமைகள் எனக்கு வந்தபோதும், என்னை அவர் ஊக்கப்படுத்தியதால்தான் நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்கிறேன். மிசாவில் இருந்தபோது என் மனைவி கோபித்துக்கொண்டு அப்செட்டாகி ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்" என்றும் அவர் கூறினார்.
பெண்களின் முக்கியத்துவமும் அறிவுரையும்
மேலும் பேசிய அவர், "பெண்கள் முன்னேறினால் அந்தக் குடும்பம் சிறப்பாக இருக்கும். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக் கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்றால் 16 குழந்தைகள் இல்லை, 16 செல்வங்கள்" என்றார்.
இறுதியாக, புதுமணத் தம்பதிகளுக்கு அறிவுரை வழங்கிய அவர், "பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்" என்று கலகலப்பாக பேசி முடித்தார்.

LIVE 24 X 7