தமிழ்நாடு

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!

கரிகாலன் ஜல்லிக்கட்டு காளைக்கு 8 வது பிறந்தநாளை முன்னிட்டு பூஜை செய்து கேக் வெட்டி கொண்டாடினர் அப்பகுதி இளைஞர்கள்.இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை: ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்!
madurai youngsters celebrate birthday by cutting cake for jallikattu bull
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகு. இவர் அப்பகுதியிலுள்ள முனியாண்டி கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்ட போது அலங்காநல்லூரில் பொது மக்களை ஒன்று திரட்டி எழுச்சி பேராட்டத்தை நடத்தினார்.

ஜல்லிக்கட்டு நிகழ்வை போற்றும் வகையில் அலங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி காரி (எ)கரிகாலன் என்ற ஜல்லிக்கட்டு காளையை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வாங்கி வளர்த்து வருகின்றனர். லோகுவுடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து இந்த காளையை பராமரித்து வருகின்றனர்.

தினமும் காளையினை குளிப்பாட்டி , நடைபயிற்சி அளித்து அன்றாடம் இந்த கரிகாலன் காளையை வளர்த்து வருகின்றனர்.ஆண்டுத்தோறும் கரிகாலனுக்கு கோவிலில் சிறப்பு பூஜை செய்து கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடுவது வழக்கம்.

கரிகாலனுக்கு 8-வது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி, பக்தர்களுக்கு உணவு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள். இதுக்குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், “ஆண்டுதோறும் உலக பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி அலங்காநல்லூரில் நடைபெறுவதால் ஜல்லிக்கட்டை போற்றும் விதமாக இந்த காளையை வளர்த்து வருகிறோம் என்றனர்”. ஜல்லிக்கட்டு காளைக்கு கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.