தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத் மசோதா தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்துகளை ஏற்க மறுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் முன்மொழிந்த தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சித்த மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, " சித்த மருத்துவப் பல்கலைக்கழகத் திருத்த மசோதா தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் தெரிவித்த கருத்துகள் குறித்துப் பேரவையில் செய்தி ஒன்றை முன்வைப்பதாக அவர் கூறினார்.
ஆளுநரின் கருத்து முரண்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு
ஆளுநர், அரசமைப்புச் சட்டப்படி வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், இந்தச் சட்ட முன்வடிவில் உள்ள சில பிரிவுகள் குறித்துத் தனது கருத்தைத் தெரிவித்து, பேரவையில் மசோதாவை அறிமுகப்படுத்தும்போது தன்னுடைய கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு அரசியல் சட்டத்துக்கும், சட்ட விதிகளுக்கும் முரணானது என்று வலியுறுத்திய முதலமைச்சர், சட்ட முன்வடிவு பேரவையில் விவாதிக்கப்படும்போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அதில் திருத்தங்களை முன்மொழியவோ அல்லது விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வாக்கெடுப்புக் கோரவோ அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும், மசோதா பேரவையில் நிறைவேற்றப்படும்போது அதன் மீது கருத்துகள் தெரிவிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆளுநரின் கருத்து நிராகரிப்பு
சட்ட மசோதா குறித்து ஆளுநர் கூறியிருக்கும் கருத்துகளை இந்தப் பேரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறிய முதலமைச்சர், அந்தக் கருத்துகள் அடங்கிய செய்தி அவைக் குறிப்பில் இடம்பெறுவதையும் மாநில சுயாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட எந்த உறுப்பினரும் ஏற்க மாட்டார்கள் என்ற காரணத்தால், அந்தக் கருத்துகளை இங்கே பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.
"2025 தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக முன்மொழிவை, பேரவையில் ஆளுநர் ஆய்வு செய்யக் கோரி அவர் வைத்த கருத்துகளைப் பேரவை நிராகரிக்கிறது" என்ற தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் முன்மொழிந்தார். ஆளுநருக்கு எதிராக முதல்வர் முன்மொழிந்த இந்தத் தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.