சென்னை திருமங்கலம் பள்ளி சாலையில், கடந்த 28ம் தேதி இரவு இருசக்கர வாகனம்மீது சொகுசு கார் மோதியதில் அயனாவரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நித்தின் சாய் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் அபிஷேக் என்பவர் காயமடைந்தார். இந்த விபத்து தொடர்பாகப் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, உயிரிழந்த மாணவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இது விபத்து இல்லை, கொலையெனக் குற்றஞ்சாட்டினார்.
இந்தப் புகாரை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சொகுசு காரை வைத்து வேண்டுமென்றே விபத்தை நிகழ்த்தி நித்தின் சாய் கொல்லப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் காதல் விவகாரத்தில் கார் ஏற்றிக் கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தேடப்பட்ட சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் தனசேகரனின் பேரன் சந்துரு, உதவி ஆணையர் பிரமானந்தம் முன் சரணடைந்தார்.
அப்போது, மாணவர் நித்தின் சாயை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கம் தனக்கு இல்லை என்றும், காரில் மட்டுமே நண்பர்களோடு பயணம் செய்ததாகவும், நிதின் சாயியை பயமுறுத்தும் நோக்கிலேயே காரை ஆரோன் இயக்கியதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது போலீசாரின் விசாரணையில், தான் தவறு ஏதும் செய்யவில்லை என்றும், தான் காரில் மட்டுமே நண்பர்களோடு பயணம் செய்ததாகவும், நிதின் சாயை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் காரை ஆரோன் இயக்கவில்லை இயக்கவில்லை என்றும், அவரைப் பயமுறுத்தவே அவன் வாகனத்தை இயக்கியதாகவும் கைதான சந்துரு வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கூடிய பணியில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.