தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்செந்தூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வரும் 7 ஆம் தேதி அன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் (கும்பாபிஷேகம்) குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 04/07/2025 முதல் 06/07/2025 வரை கீழ்கண்ட இடங்களிலிருந்து திருச்செந்தூருக்கும் மற்றும் 07/07/2025 அன்று திருச்செந்தூரிலிருந்து பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை. திருச்சி, புதுச்சேரி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், ஈரோடு, நாகப்ட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பக்தர்கள் கடைசி நேரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் tnstc-ன் அதிகாரபூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.