நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்துள்ளார். மடோனா ஊட்டியை சேர்ந்த போட்டோகிராபர் ஒருவரோடு தகாத உறவு வைத்திருந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான வனத்துறை அதிகாரி மகேந்திரன் 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மனைவியை இழந்து தனியாக வாழ்ந்து வந்த கனகராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கனகராஜிடம் 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 22 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு கனகராஜை விவாகரத்து செய்தார். அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆதனூர் பகுதி சேர்ந்த வட்டார சுகாதார ஆய்வாளரான வனத்தையன் மனைவி உயிரிழந்த நிலையில் தன்னுடைய மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்த மேட்ரிமோனியில் தனக்கு வரம் வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார்.
சொத்தை அபகரிக்க பக்கா பிளான்:
இந்நிலையில் மேட்ரிமோனியில் இருந்த வனத்தையனின் செல்போன் எண்ணை எடுத்து வனத்தையனை தொடர்பு கொண்ட மடோனா தனக்கு இரண்டாவது திருமணம் ஆனதை மறைத்து என் கணவர் 2013 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. நாங்கள் இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறோம் என கூறியுள்ளார்.
உடனே வனத்தையன் மடோனாவை தேவ ஆலயத்திற்கு வரவழைத்து மத போதகரிடம் பேசி அதன் பின் மடோனாவை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் மடோனா வனத்தையனுடைய சொத்துக்களை அபகரித்துக் கொள்ள அவசர அவசரமாக வனத்தையனின் மகளான சிசிலியாவுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். திருமணமாகிய சிசிலியா மற்றும் சிசிலியாவின் கணவர் இருவரையும் சண்டை போட்டு வீட்டை விட்டு துரத்தியுள்ளார். அதன் பின்பு வனத்தையனின் சொத்துகளை அபகரிக்க பல்வேறு திட்டங்களை போட்டுள்ளார் மடோனா. ஆனால் எந்த திட்டமும் பலிக்கவில்லை.
இந்தச் சூழலில் திருமணமான மூன்றே மாதத்தில் மடோனா வனத்தையனிடம் சண்டை போட்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து கனகராஜ் உடன் சென்று வாழ்ந்து வந்துள்ளார். இச்சூழலில் வனத்தையன் கேன்சர் நோயால் அவதிப்பட்டு மரணப்படுக்கையில் உள்ளார் என தெரிந்த மடோனா வனத்தையனிடம் வந்து ஒட்டிக்கொண்டார்.
போலீசாரிடம் சிக்கியது எப்படி?
இச்சூழலில் வனத்தையனிடம் இருந்த பணம் நகைகள் மற்றும் சொத்து பத்திரங்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டார். வனத்தையன் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இறந்துவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மடோனா வனத்தையன் இறந்த மூன்றாம் நாளிலேயே அங்கிருந்து சென்று விட்டார். இச்சூழலில் வனத்தையனின் மகள் சிசிலியாவின் வீட்டையும் அபகரிக்கும் நோக்கத்தில் அடியாட்களை கூட்டி வந்து அத்துமீறி கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டுள்ளார்.
இதுகுறித்து வனத்தையனின் மகள் சிசிலியா தாம்பரம் கமிஷனர் மற்றும் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் அடிப்படையில் மடோனாவை தேடிய மணிமங்கலம் போலீசார் மடோனாவை ஆவடியில் கைது செய்தனர். பின்னர் மணிமங்கலம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும் போலீசார் மடோனாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் தான், இவர்கள் இல்லாமல் இன்னும் எத்தனை அரசு அதிகாரிகளை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு சொத்துகளை அபகரித்துள்ளார் என்ற முழு விவரம் தெரிய வரும். அவர் மீது ஏற்கனவே அரசு கருவூலத்தை ஏமாற்றி பணம் பெற்றதாக உதகை மண்டல DCB குற்ற எண் 5/2021 U/S 420,177 IPC என்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்சமயம் மணிமங்கலம் காவல் நிலையத்தில் குற்ற எண் 179/2025 U/S 3(5),191(2),329(3),324(2),318(4),352(3) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.