தொழில்நுட்பம்

முடிவுக்கு வரும் Amazon Prime Day sale.. மொபைல் போன்களுக்கு என்ன ஆஃபர்?

கடந்த 12 ஆம் தேதி தொடங்கிய ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை நாளையுடன் முடியவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு என்ன மாதிரி ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்பகுதியில் காணலாம்.

முடிவுக்கு வரும் Amazon Prime Day sale.. மொபைல் போன்களுக்கு என்ன ஆஃபர்?
Amazon Prime Day 2025: Big Discounts on iPhones, Galaxy S24 Ultra
இணையத்தின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், ஒரு கடைக்கு போய் பொருள் வாங்குவது என்பது எல்லாம் தற்போதைய தலைமுறையினரிடம் வெகுவாக குறைந்து வருகிறது. அதிலும் மொபைல், எலக்ட்ரானிக் கேட்ஜட் பொருட்களை அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற முன்னணி ஆன்லைன் தளங்களின் வாயிலாக தான் பலர் ஆர்டர் செய்து வாங்குகின்றனர்.

அதற்கு காரணம், ஆன்லைனில் வழங்கப்படும் அதிரடி ஆஃபர்கள் தான். அந்த வகையில் அமேசான் தளத்தில் கடந்த 12 ஆம் தேதி ’அமேசான் ப்ரைம் டே’ விற்பனை தொடங்கியது. நாளை ஜூலை 14 ஆம் தேதியோடு அமேசான் ப்ரைம் டே முடிவுக்கு வர உள்ள நிலையில், பல்வேறு பொருட்களுக்கு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக சில முன்னணி மொபைல் போன்களுக்கு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை இப்பகுதியில் காணலாம்.

ஸ்மார்ட்போன் சலுகை விவரம்:

ஐபோன் 16e: இந்தியாவில் ரூ.59,999-க்கு அறிமுகமாகியது. அமேசான் ப்ரைம் டே விற்பனையில் சில குறிப்பிட்ட வங்கிகளின் க்ரெடிட் கார்ட் ஆஃபர் வாயிலாக ₹49,999 என்ற விலையில் நீங்கள் வாங்கலாம். வழங்கப்பட்டுள்ள ஆஃபர் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட ரூ.10,000 சேமிக்கலாம்.

ஐபோன் 15: ஐபோன் மாடல்களில் பயனர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஐபோன் 15 மாடலை இந்த அமேசான் ப்ரைம் டே விற்பனையில் ₹57,249-க்கு சில குறிப்பிட்ட வங்கிகளின் க்ரெடிட் கார்ட் ஆஃபர் வாயிலாக வாங்கலாம். தள்ளுபடி விலையானது கிட்டத்தட்ட ₹12,600 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா: சாம்சங் மாடல் போன்களில் அதிக விலை என பிரமிக்க வைத்த இந்த மாடலின் அசல் விலையானது ₹1,29,999. தற்போது ₹74,999-க்கு அமேசான் ப்ரைம் டே விற்பனையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் போன்கள்: ஒன்பிளஸ் 13, 13s, மற்றும் 13R உள்ளிட்ட பல்வேறு ஒன்பிளஸ் மாடல்களுக்கும் கணிசமான ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்களைத் தேடுபவர்களுக்காக, பயனர்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் சில முக்கிய ஸ்மார்ட் போன் மாடல்களான Realme Narzo 80 Pro, Lava Storm Play, Redmi A4, iQOO Z10x, மற்றும் Samsung Galaxy A55 போன்றவை கவர்ச்சிகரமான தள்ளுபடி விற்பனையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களைத் தவிர, சில ஆடியோ தயாரிப்புகளுக்கும் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. சென்ஹைசர் ஆம்பியோ சவுண்ட்பார் மினி ரூ.74,990 லிருந்து ரூ.44,990 ஆகக் குறைந்துள்ளது. மற்றும் சென்ஹைசர் மொமென்டம் 4 வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் ரூ.20,990 ஆகக் குறைந்துள்ளன.

ஆஃபர் விலையானது நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாறக்கூடியது என்பதால், கூடுதல் தகவல்களுக்கு அமேசான் தளத்தினை காணவும்.