தொழில்நுட்பம்

iPhone 17 Air: ஐபோன் 17 சீரிஸ் மாடல் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள்

iPhone 17 Air: வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 சீரிஸ் மாடலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதுக்குறித்து உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கசிந்துள்ள சில தகவல்கள் ஐபோன் 17 சீரிஸ் மாடல் வெளியீடு குறித்த எதிர்பார்பினை அதிகரித்துள்ளது.

iPhone 17 Air: ஐபோன் 17 சீரிஸ் மாடல் குறித்து இணையத்தில் கசிந்த தகவல்கள்
Information about iPhone 17 series model leaked online
iPhone 17 Air: ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் கொடிகட்டி பறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி புதுப்புது மாடலை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டு ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் புதிய ஐபோன் 17 ஏர் போன்ற 4 விதமான 17 சீரிஸ் மாடல்கள் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த 17 சீரிஸ் மாடல்களின் சிறப்பம்சங்கள் என உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. அதுக்குறித்து இந்த பகுதியில் காணலாம்.

மெல்லிய இலகுவான ஐபோன்:

ஐபோன் 17 ஏர் சுமார் 145 கிராம் எடையும், 5.5 மிமீ தடிமன் மட்டுமே கொண்டதாகவும் இருக்கும் என ஒரு தகவல் பரவி வருகிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆப்பிள் இதுவரை தயாரித்த மிக மெல்லிய மற்றும் இலகுவான ஐபோன்களில் ஒன்றாக ஐபோன் 17 ஏர் மாடல் விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஐபோன் SE 2, ஐபோன் 13 மினி போன்ற மாடல்களின் அளவுடன் ஒத்துப்போகிறது. வடிவமைப்பு பாராட்டை பெறும் வகையில் இருந்தாலும், பேட்டரி திறன் ஏமாற்றத்தை தரும் என கூறப்படுகிறது.

Image

அதற்கு காரணம், ஐபோன் 17 ஏர் மாடல் 2,800mAh பேட்டரி திறனை மட்டுமே கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. யோசித்து பாருங்கள், இன்று தூங்கும் நேரத்தை தவிர போனும் கையுமாக தான் இளசுகள் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பேட்டரி திறன் அவர்களுக்கு போதுமா என்று? ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 ப்ரோ 2815mAh பேட்டரி திறனுடன் வெளியான போதும், பயனர்கள் ஆப்பிள் நிறுவனம் பேட்டரி திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம்.

மேலும், இந்த மாடலின் ஸ்கீரின் திரை 6.6 அங்குலம் இருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங்கின் கேலக்ஸி S25 எட்ஜ், 5.8 மிமீ திரை அம்சத்துடன், 3,900mAh பேட்டரியுடன் வரும் நிலையில், ஐபோன் 17 ஏர் மாடல் ஸ்மார்ட்போன் பயனர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் விலை:

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் விலை தோராயமாக ரூ.89,900 இல் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் அமெரிக்காவில் அடிப்படை மாடலின் விலை சுமார் $899 இல் இருந்து தொடங்கலாம் எனவும், துபாயில் இதன் விலை தோராயமாக AED 3,799 இல் இருந்து தொடங்கலாம் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது. உள்நாட்டில் விதிக்கப்படும் வரி போன்ற அம்சங்களின் அடிப்படையில் மொபைல் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.