மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பினை கையகப்படுத்தியது முதலே, பல்வேறு அப்டேட்கள் தொடர்ச்சியாக வாட்ஸ்அப் செயலியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல்களை பரிமாறுக் கொள்வதில் உலகம் முழுவதும் பலரின் விருப்பத் தேர்வுகளில் ஒன்றாக விளங்குவது வாட்ஸ் அப் செயலி தான்.
இந்நிலையில், ஒருசில ஐபோன் மாடல்களில் நேற்றைய தினம் முதல் தற்போதைய மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப் செயலியானது தனது இயக்கத்தை நிறுத்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், பழைய ஐபோன் மாடல் போனை பயன்படுத்தி வந்தவர்கள் புதிய போன் வாங்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஆதரவை நிறுத்தியுள்ள ஐபோன் மாடல்களின் விவரம் பின்வருமாறு-
---->ஐபோன் 5s
---->ஐபோன் 6,
---->ஐபோன் 6 பிளஸ்
(மேற்குறிப்பிட்ட போன் மாடல்களில், இனி வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது)
ஏன் சேவை நிறுத்தப்பட்டது?
நாம் பயன்படுத்தும் ஐ-போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டமானது (OS) iOS 15.1 க்கு குறைவாக இருந்தால் தற்போதைய வாட்ஸ் அப் செயலியானது இனி இயங்காது. வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களில் iOS 15.1 அல்லது அதற்குப் பிந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிப்பை நிறுவியிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம், பழைய OS பதிப்புகளுக்கான ஆதரவை நிறுத்துவதன் மூலம், வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த இயலும் என்பதற்காக தான்.
---->ஐபோன் 6s
---->ஐபோன் 6s பிளஸ்
---->ஐபோன் SE (First generation)
மேற்குறிப்பிட்ட இந்த கடைசி மூன்று மாடல்களை, பயனர்கள் iOS 15.8.4 க்கு புதுப்பிக்க முடியும். அவ்வாறு புதுப்பிக்கும் பட்சத்தில் தொடர்ந்து WhatsApp செயலி இந்த போன் மாடல்களில் இயங்கும்.
தனிப்பட்ட மற்றும் குழு உரையாடல்களிலும் Meta AI அம்சத்தைப் பயன்படுத்தும் வசதி, அனுப்பிய செய்திகளை 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளும் வசதி, HD தரத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் வசதி, ஐபோன் பயனர்கள் வீடியோ அழைப்புகளின்போது வீடியோவை ஜூம் செய்யும் வசதி, உரையாடல்களை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய சாட் லாக் அம்சம் என நாளுக்கு நாள், வாட்ஸ் அப் செயலி புதிய புதிய சேவைகளை நோக்கி நகர்வதால், வாட்ஸ் அப் செயலிக்கான மவுசு டெக் உலகில் குறைந்தப்பாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.