'சிக்மா' திரைப்படத்தை நடிகர் விஜய்யின் மகனாக ஜேசன் சஞ்சய் இயக்கத் தொடங்கினாலும், தற்போது முதல்வர் மகனின் படமாக வெளிவரும்போது வரவேற்பு இன்னும் கூடியிருக்கிறது. அதற்கேற்ப, சமீபத்தில் வெளியான 'சிக்மா ஸ்டைல்' ப்ரோமோ பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக, படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. இப்படிப் பெரும் அதிர்வை உண்டாக்கியிருக்கும் ஒரு படத்துக்குள் ஹீரோவாகப் பயணித்த அனுபவத்தை சந்தீப் கிஷன் பகிர்ந்த எக்ஸ்க்ளூசிவ் உரையாடலிலிருந்து...
லைகா தயாரிப்பு, முதல்வர் விஜய் மகன் இயக்குநராக அறிமுகம் எனப் பரபரப்பை ஏற்படுத் தியிருக்கும் 'சிக்மா' திரைப்படத்துக்குள் சந்தீப் கிஷன் வந்தது எப்படி?
'பார்க்கிங்' திரைப்படத்தோட தயாரிப்பாளர் சினிஷ் என்னோட நெருக்கமான நண்பர். முதல்ல அவர்தான் என்கிட்ட 'சிக்மா' டீம்ல இருந்து பேசுவாங்கன்னு விஷயத்தைச் சொன்னார். ஹைதராபாத்ல ஜேசன் சஞ்சய்யைச் சந்தித்தபோது, ஒவ்வொரு காட்சியையும் டயலாக்கோடு தெளிவா கதை சொன்ன விதமே ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ஓர் இயக்குநரா அறிமுகமான சஞ்சய் அடுத்தடுத்த சில நாட்கள்லயே என் தம்பியா மாறிட்டார். இது எங்க எல்லாருக்குமே முக்கியமான ஒரு படம்."
பல போராட்டங்களை எதிர்கொள்கிற சாதாரண மனிதர்களின் கதைதான் 'சிக்மா' எனக் கேள்விப்பட்டோமே?
"குரு என்கிற ஒருத்தனும், அவனைச் சுத்தி இருக்குற இன்னும் சிலரும் பிரச்னையை எதிர்கொண்டு, முடிவா எப்படி ஒண்ணு சேர்றாங்க என்பதுதான் கதை இதோட ஃபிலாசஃபி என்னன்னா மனுஷங்க மனுஷங்கதான்; அவங்களுக்கு நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும். சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி நாம மாறிக்க வேண்டியதுதான். அந்தச் சூழ்நிலைக்கும் நாம நல்லவங்களா இருக்கணும்னா அந்த நேரத்து உணர்ச்சிகளை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுலயும் இருக்கு. இதுதான் படத்தோட மையம். ஆக்ஷன் திரில்லர் களம். சின்னப் பசங்க தொடங்கி பெரியவங்க வரைக்கும் பார்க்குற விதமா தன்னோட முதல் படம் இருக்கணும்னு இயக்குநர் சஞ்சய் தெளிவா திட்டமிட்டார். அதேபோல, நல்ல பொழுதுபோக்கு படமாவும் வந்திருக்கு"
முதல்வர் மகன், முதல் பட இயக்குநர் ஜேசன் சஞ்சய்யோடு படப்பிடிப்பில் பணிபுரிந்த அனுபவம் எப்படி?
"சஞ்சய்யோட ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கையும் பார்க்கப் பார்க்க, ஒரு புதிய இயக்குநரோடு வேலை பார்க்கிறோம்கிற உணர்வே வரலை. செட்ல அவ்ளோ நம்பிக்கையைக் கொடுத்தார். கடின உழைப்பு. எப்பவுமே எல்லாத்துக்கும் தயாரா இருக்கிற அந்த வேகம், துடிப்பு... துளியளவுகூடத் தன்னோட பின்னணி, ஸோ அண்ட் ஸோ ஃபீலிங்கை எனக்கோ, என்னைச் சுத்தி இருந்தவங்களுக்கோ அவர் கொடுத்ததே இல்லை. எவ்ளோ பெரிய இடத்துல இருந்து வந்திருந்தாலும், தன்னை மறந்தும் எந்தவொரு சந்தர்ப்பத்துலயும் அதை வெளிப்படுத்திக்காத மனுஷன் சஞ்சய். எதுக்காகவும் அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டார்."
விஜய்யின் சினிமா பாணி, மேனரிசம் போன்றவற்றை அவரது மகன் ஜேசனிடம் படப்பிடிப்புத் தளத்தில் பார்க்க முடிந்ததா?
"ஷூட் ஆரம்பிக்கும் போது சஞ்சய்க்கு 24 வயது. அவ்ளோ கிளியராக ஒரு கதையை எடுத்துக்கொண்டு எல்லாத்தையும் எதிர் கொண்டார். இதனால, சுற்றி இருப்பவர்களுக்கு வேறு எந்த ஃபீலிங்ஸும் அவரைப் பார்க்கும்போது வராது. அவர் பார்க்க விஜய் சார் மாதிரியே இருப்பதால் நான்தான் ஸ்பாட்ல அப்பப்போ, 'கோகா கோலா பிரவுனு கலருதான்', 'வாடி வாடி கைப்படாத சீடின்னு மைக்ல பாட்டுப் பாடி ஜாலியாகக் கிண்டலடிப்பேன். ஸ்பாட்ல இருந்த நாங்க எல்லாருமே விஜய் சாரோட ரசிகர்கள். அதுவும் அழகான ஓர் அனுபவம்னு சொல்லலாம்."
நீங்கள் நடித்த 'மாநகரம்' படத்தில் அறிமுக இயக்குநராகத் திரைத்துறைக்கு வந்த லோகேஷ் கனகராஜ் இப்போது மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறார். ஏன் இருவரும் மீண்டும் இணையவே இல்லை?
"எனக்கு நெருக்கமாக உள்ள ஐந்து நண்பர்களில் லோகேஷும் ஒருவர். 'கைதி' படத்துக்கு முன்பும், அதற்குப் பிறகும் இருவரும் இணையும் ஒரு திட்டம் இருந்தது. அது உடனடியாக நடக்கவில்லை.
இப்போது லோகேஷ் இருக்குற சூழ்நிலை வேறு. பெரிய பெரிய படங்களில் கவனம் செலுத்துகிற நிலையில் இருக்கிறார். நான் நடித்த படத்தை அவரது முதல் படமாக இயக்கியவர், இன்று பெரிய இடத்தில் இருக்கிறார் என்பது சந்தோஷம். நிச்சயம் நாங்க திரும்ப இணைவோம்."
'ராயன்', 'கேப்டன் மில்லர்' படங்களில் தனுஷுடன் இணைந்து நடித்திருப்பீர்கள். சமீபத்தில் இப்படங்களுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டது குறித்து விமர்சனம் எழுந்ததே?
தனுஷ் அவ்ளோ எனர்ஜிட்டிக்கான ஒரு மனிதர். சினிமாவில் ஒருவர் பல தளங்களில் தொடர்ச்சியாக இயங்குவது வரம். அதை நேர்த்தியாக தனுஷ் கையாள்கிறார். எல்லா வருஷமுமே, 'இந்தப் படத்துக்கு விருது கொடுத்திருக்காங்க.... அந்தப் படங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?' என ஒரு கேள்வி வரத்தான் செய்யுது. 'ராயன்' வெளிவந்தபோது வசூல் ரீதியான கவனத்தைப் பெற்றும், பெரிதாகப் படக்குழுவுக்கு யாரும் வாழ்த்து சொல்லவில்லை. அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இப்போது இரண்டு படங்களுக்கும் கிடைச்சிருக்கிற தேசிய விருதுகளை இந்த யூனிவர்ஸ் கொடுத்த மரியாதையாகத்தான் பார்க்கிறேன்."
தமிழ், தெலுங்குன்னு பயணிக்கும் அனுபவம் எப்படி உள்ளது?
தாய்மொழி தெலுங்கா இருந்தாலும், பிறந்து வளர்ந்தது எல்லாம் கோடம்பாக்கத்துலதான். இங்கே நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. தெலுங்குல பிஸியா ஓடினாலும், தமிழ்ல வர்ற படங்களைப் பார்த்துட்டு ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷமா ஷேர் பண்ணும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். இங்கேதான் சினிமா பார்த்து வளர்ந்தேன். இப்போ அந்த சினிமாவுக்குள்ள நானும் இருக்கேன்கிறதுல ரொம்பவே திருப்தி!"
- குமுதம் செய்திகளுக்காக ம.மோகன்.

LIVE 24 X 7