K U M U D A M   N E W S

சினிமா

சண்டை காட்சிகளே இல்லாத திரைப்படம்.. தாவுத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் வெளியீடு!

கேங்ஸ்டர் படம் என்றாலே அடிதடி வெட்டு குத்து என சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தற்போது " தாவுத் " என்ற பெயரில் அடிதடி வெட்டு குத்து சண்டை காட்சிகளே இல்லாத ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் உருவாகிறது.

'மேட்மேக்ஸ்' ஸ்டைலில் 'இராமாயணா'.. யாஷ் கலக்கும் ஆக்‌ஷன் சீன்கள் வெளியாகின!

யாஷ் மற்றும் மேட்மேக்ஸ் பட ஸ்டண்ட் இயக்குநர் கய் நோரிஸ் இணையும், நமித் மல்ஹோத்ராவின் 'இராமாயணா' படத்தின் பெரும் ஆக்ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஆக்‌ஷன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Thug life பெயருக்கு எதிர்ப்பு- கமலை வைத்து வெளிச்சம் தேடுகிறாரா கிருஷ்ணசாமி?

மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள "Thug Life" திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கமல் படங்களுக்கு மட்டும் தொடர்ந்து எதிர்ப்பை வெளிக்காட்டி வெளிச்சம் தேடுகிறாரா கிருஷ்ணசாமி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முத்த மழை கேட்டேன்.. என்ன ஒரு வித்தை: ஜேம்ஸ் வசந்தன் நெகிழ்ச்சி

தக் லைஃப் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘முத்த மழை” பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், இசையமைப்பாளரும்-நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உடல்நலக்குறைவால் நடிகர் ராஜேஷ் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக (மே 29, 2025) இன்று காலமானார். தனது 75 வயதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் கோலோச்சிய ஒரு முக்கிய கலைஞரைத் தமிழ் சினிமா இழந்துள்ளது.

சென்னையில் ‘குபேரா’ இசை வெளியிட்டு விழா...தேதி அறிவித்த படக்குழு

தனுஷ், நாகர்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள குபேரா படத்தின் இசை வெளியிட்டு விழா தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

போனி கபூரின் புதிய முயற்சி.. உத்தரப்பிரதேசத்தில் உயர்தர திரைப்பட நகரம்!

போனி கபூரின் முயற்சியால், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் வே வழியில், ஜெவார் விமான நிலையத்திற்கு அருகில், உலகத் தரத்திலான திரைப்பட நகரம் உருவாகிறது. இந்த திட்டம், மாநிலத்தின் திரைப்படத் துறையை உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

உலகெங்கும் ஜூன் 6 முதல்.. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மெட்ராஸ் மேட்னி..!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

த்ரில்லர் கதைக்களத்தோடு மே 30-ல் வெளியாகும் “மனிதர்கள்” திரைப்படம்!

திரில்லர் கதைக்களத்தில் உருவான மனிதர்கள் திரைப்படம் மே 30 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

YOUTUBE CHANNEL தொடங்கிய AK..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?

'அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கி உள்ளதாக அஜித்குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி அஜித்குமார் ரேசிங் அணி பங்கேற்கும் ரேஸ்கள் அனைத்தும் இந்த யூடியூப் சேனலில் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.