பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் (NEET) மறுதேர்வின் போது ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட தேர்வர்களுக்கு பதிலாக வேறு நபர்கள் தேர்வில் பங்கேற்றதாக சந்தேகிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரேர்னா குமார் தெரிவித்துள்ளார்.
இந்த முறைகேட்டில் பயோமெட்ரிக் ஆபரேட்டர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மேலும் 10 முதல் 12 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்திலும் நீட் மறுதேர்வில் முறைகேடு செய்ய முயன்ற மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு மையத்திற்குள் ஆடைக்குள் சிம்கார்டு மற்றும் பழைய கேள்வித்தாளை மறைத்து எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீட் மறுதேர்வைச் சுற்றி தொடர்ந்து வெளியாகும் முறைகேடு குற்றச்சாட்டுகள், தேர்வு முறையின் நம்பகத்தன்மை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளன.

LIVE 24 X 7