சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி ஜென் சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்த கரப்பான் ஜனதா கட்சியின் தலைவர் அப்ஜித் தீப்கேவிடம் சிறந்த முதலமைச்சர்கள் யார் என்று கேள்வி எழுப்பட்ட நிலையில், அதற்கு பதலளித்த அப்ஜித் இந்தியாவில் சிறந்த முதலமைச்சர்களாக தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினும், கேரளாவில் பினராயி விஜயனும்,டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறந்த முதலமைச்சர்கள் என்று பதிலளித்திருந்தார்.
இந்த பதில் சமூக வலைத்தளங்களில் எல்லாம் வைரலாகி வரும் நிலையில் இதன் மூலம் மூன்றாவது கூட்டணி உருவாக போகிறதா? என்று அனைவரும் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் காங்கிரஸ் மீதான அதிருப்தி இந்த பதில், ஏற்கனவே காங்கிரஸ் மீது கம்யூனிஸ்ட்டுகளும், திமுகவும், ஆம் ஆத்மியும் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றன.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளும் மாறி மாறி ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில் கம்யூனிஸ்ட்டுகளை பாஜகவுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் செய்த அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது. இரண்டும் நேர் எதிர் சித்தாந்தமாக இருந்து வரும் நிலையில் இரண்டினையும் ஒப்பிட்டு பேசியது கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
அதேபோல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இருந்து வந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில் உடனே புதிதாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்த தவெகவிற்கு தாவியது. இது திமுக மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விசிக,ஜயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) உள்ளிட்ட கட்சிகள் முறைபடி திமுக தலைவரை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து பின்னர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால் காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் முதல் வரிசையில் நின்று தவெகவுக்கு ஆதரவை தெரிவித்தது. இதன் மூலம் காங்கிரஸ் நன்மதிப்பை குறைத்து கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
டெல்லியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஆம் ஆத்மி கட்சியின் மீது ஊழல் புகார் அளித்து அரசு காலியானதற்கு முக்கிய காரணமாக இருந்தது காங்கிரஸ். இதன் மூலம் பாஜகவை விடவும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வந்தததால் அக்கட்சியின் மீது ஆம் ஆத்மி கட்சியினர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இப்படி மூன்று கட்சிகளுக்கும் காங்கிரஸ் மீது தீரா பகை இருந்தும் வரும் நிலையில் அப்ஜித் தீப்கேவின் இந்த பதில் அடுத்து மூன்றாவது புதிய கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? ஒரு வேளை புதிய கூட்டணி உருவானால் காங்கிரஸின் நிலைமை என்னவாகுமோ? இப்படி பல கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.

LIVE 24 X 7