மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல, த.வெ.க. ஆட்சி அமைந்து 50 நாட்களைக் கடந்துவிட்டபோதிலும், அதற்கு முன்பு நடந்த திரைமறைவு ரகசியங்கள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில், 'தி.மு.க. ஆதரவுடன், எடப்பாடியை முதல்வராக்க முயற்சி நடப்பதாக ஸ்டாலின் என்னிடம் கூறினார்' என அதே வெடியை கொளுத்திப்போட்டு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஐ.யு.எம்.எல். அகில இந்திய தலைவர் காதர் மொகிதீன். இந்த சூழலில் குமுதம் ரிப்போர்ட்டருக்காக அவர் அளித்திருக்கும் பிரேத்யேகப் பேட்டி...
தேர்தல் முடிவுகளில் தி.மு.க. கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட என்ன காரணம்?
"தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சிறப்பான நலத்திட்டங்களால், ஸ்டாலின் தலைமையில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமையும் என்றே நினைத்தோம். த.வெ.க. ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகளை பெறும் என்றுதான் நினைத்தோம். 108 தொகுதிகளில் த.வெ.க. வெற்றிபெறும் என கற்பனைகூட செய்யவில்லை. ஆனால், மக்கள் வேறு மாதிரியான தீர்ப்பை அளித்துவிட்டனர்."
தி.மு.க. பெரிதும் நம்பியிருந்த சிறுபான்மையினர் வாக்குகள், த.வெ.க.விற்கு போய்விட்டனவா?
"த.வெ.கவில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், விஜய் மீது அன்பு கொண்டவர்கள் அவர்களுக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் பெரும்பான்மையான வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே சென்றுள்ளன. தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதிகளில், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வாக்குகளை வாங்கி இருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது."
அப்படி இருக்கும்போது நீங்கள் த.வெ.க. ஆதரவு நிலைப்பாடு எடுக்கக் காரணம் என்ன?
"த.வெ.க. ஆட்சி அமைக்க முதலில் காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அதன்பின், த.வெ.க. நிர்வாகிகள் எங்களிடம் ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தார்கள். காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரளாவில் உள்ள எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு தலைவரிடம் பேசினார். அதைத்தொடர்ந்து, த.வெ.க. அரசிற்கு ஆதரவு கொடுக்குமாறு எங்களுக்கு தகவல் தரப்பட்டது.
ஆனால், 'தி.மு.கவுடன் நீண்டகாலமாக நாங்கள் பயணிக்கிறோம். கேரள மாடல் அரசியலை நாங்கள் ஃபாலோ செய்ய முடியாது என்று நாங்கள் சொல்லிவிட்டோம். எங்கள் பொதுச்செயலாளர் குஞ்ஞாலிக்குட்டியை ஸ்டாலினுடன் பேச வைத்து, இதை உறுதிப்படுத்திவிட்டேன்."
பிறகு, அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வர காரணம் என்ன?
"அதன்பிறகு மே 10ம் தேதிக்குள் த.வெ.க. ஆட்சி அமைக்கவில்லை என்றால் பா.ஜ.க. கவர்னர் ஆட்சியை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. பா.ஜ.க. ஆட்சி வருவதைத் தடுக்க, த.வெ.க.விற்கு ஐ.யு.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தர வேண்டும் என சமூகப் பெரியவர்கள், ஜமாஅத் தலைவர்கள், உலாமாக்கள், பல்வேறு முஸ்லிம் அமைப்புகள், பெண்கள் என பல தரப்பிலிருந்தும் எங்களுக்கு அழுத்தம் வந்தது.
இதையடுத்து நானும், எங்கள் பொதுச்செயலாளர் அபூபக்கரும் ஸ்டாலினைச் சந்தித்தோம். அப்போது அவர், 'அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்று சில நண்பர்கள் பேசுகிறார்கள்' என்று கூறினார். அவர் சொன்னது அப்போது எனக்கு விளங்கவில்லை. அவரை சந்தித்துவிட்டு வெளியில் வந்தபோது அபுபக்கரிடம், என்னப்பா சொல்றார்?" எனக் கேட்டேன். 'தி.மு.க. ஆதரவுடன் எடப்பாடியை முதல்வராக்கலாம்னு சொல்றார்ண்ணே' என்று அவர் சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இரண்டாம் நாள் ஸ்டாலினைசந்தித்தபோது, 'திருமாவளவனை சி.எம். ஆக்க முயற்சி பண்றாங்கண்ணே' என்று தெரிவித்தார். 'அவர் எம்.எல்.ஏ.வாகவே இல்லையே, இது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டேன். 'ஆறு மாதங்களில் எம்.எல்.ஏ. ஆக்கிவிடலாம்' என்று பதில் சொன்னார்கள். 'இது சரிப்பட்டு வராது. மக்கள் ஏற்கமாட்டார்கள்' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு கட்சியின் உயர்மட்ட குழுவைக் கூட்டி விவாதித்தபின், த.வெ.கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினோம்."
இந்த முடிவை தி.மு.க.விடம் தெரிவித்தீர்களா?
"த.வெ.க. அரசுக்கு ஆதரவு தருவது தொடர்பான எங்கள் கட்சி தீர்மானத்தை முன்னாள் அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோரிடம் படித்து காட்டினோம். நேரு பதில் எதுவும் சொல்லவில்லை. வேலு மட்டும் 'எதுக்கு அவசரப்பட்டு ஆதரவு கொடுக்கறீங்க?' என்றார். அதன்பிறகு உயர்மட்டக் குழு எடுத்த முடிவின்படி, நிபந்தனையற்ற ஆதரவு கடிதத்தை த.வெ.க.வுக்கு வழங்கினோம்."
விஜய் உங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பு சோபா வந்தது சர்ச்சையானதே?
"எங்களை நேரில் சந்தித்து நன்றி சொல்ல முதல்வர் விஜய் வருவதால், இரண்டாவது மாடியில் வாடகை சோபா, ஏ.சி. வசதி செய்தோம். அதைத்தான் தற்போது 'சோபா மாடல் அரசியல்' என்கிறார்கள்."
நிபந்தனையற்ற ஆதரவு என்ற நிலையில் இருந்த நீங்கள், த.வெ.க. அமைச்சரவையில் இணையும் முடிவை எடுக்க ஏதாவது காரணம் இருந்ததா?
"நாங்கள் ஆதரவு அளித்தபோது அமைச்சர் பதவி எதையும் கேட்கவில்லை. ஆனால், அமைச்சரவை பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, விஜய் எங்களை தொடர்புகொண்டு, 'நீங்களும் அமைச்சரவையில் சேர்ந்தால் நன்றாக இருக்கும்' என்றார். இதற்கு முன்பு எந்த அரசும் எங்களை அமைச்சரவையில் சேருமாறு இவ்வளவு பெருந்தன்மையாக அழைத்ததில்லை. எனவே, மீண்டும் கேரளாவில் உள்ள எங்கள் தேசியத் தலைமையுடன் ஆலோசனை நடத்தினோம். அவர்கள், அமைச்சரவையில் சேர்வது நல்லது என்றனர். எங்கள் சமுதாயத்திலிருந்தும் அதே கருத்து வலியுறுத்தப்பட்டது. அதன் பிறகுதான் ஷாஜகான் அமைச்சரானார்.
அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, 'நீங்கள் அமைச்சரவையில் இணைந்ததால்தான் எங்கள் அமைச்சரவை முழுமை பெற்றது' என்று விஜய் கூறினார். 'என்னங்க பெரிய வார்த்தை சொல்றீங்க! என்றேன். அப்போது, பக்கத்தில் இருந்த கவர்னர், 'ஐ.யு.எம்.எல். சேர்ந்தால்தானே ஆல் இன்குளுசீவ் கவர்மென்ட் ஆகும்' என கமெண்ட் செய்தார்."
த.வெ.க. அரசின் முடிவுகளில் ஐ.யு.எம்.எல். பங்களிப்பு எப்படி இருக்கும்?
"அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப எங்கள் அமைச்சர் செயல்படுவார். எங்கள் சமுதாயக் கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் வைப்போம். அவற்றை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதோடு, தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது."
பா.ஜ.க. எதிர்ப்பில் தி.மு.க.வை விட த.வெ.க. சிறப்பாக செயல்படும் என நினைக்கிறீர்களா?
"பா.ஜ.க.வை எதிர்ப்பது எங்கள் கொள்கை அல்ல. பா.ஜ.க.வின் சில கொள்கைகளைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். நாங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். பா.ஜ.க.வுடன் யார் கூட்டணி வைத்தாலும் எங்கள் ஆதரவு கிடையாது. 1989ல் மும்பையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் இப்போதும் பின்பற்றுகிறோம். இதன் அடிப்படையில்தான், கவர்னர் ஆட்சி என்ற பெயரில் மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சி தமிழ்நாட்டில் வரக்கூடாது என்பதற்காக த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தோம்."
த.வெ.க. கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை இடதுசாரிகள் புறக்கணித்துள்ளனரே?
"இடதுசாரிகள், 'நாங்கள் அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். கூட்டணியில் சேரவில்லை" என்று கூறியிருப்பது அவர்கள் நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை அமைச்சரவையிலும் இணைந்தபிறகு, கூட்டணியில் இல்லை என்று சொல்ல முடியாது."
தேசிய அரசியலில் விஜய் பங்குபெற வேண்டும் என நினைக்கிறீர்களா?
"தமிழ்நாட்டை மேலும் மேலும் முன்மாதிரியான மாநிலமாக மாற்ற எல்லா துறைகளிலும் அற்புதமான காரியங்களை விஜய் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்த பணி சிறப்பாக முடிந்தால் தமிழக வெற்றிக் கழகம், இந்திய வெற்றிக் கழகமாக மாறக்கூடிய வாய்ப்பு தானாக வந்துவிடும். அதோடு, தமிழ்நாடு முதல்வராக இருக்கும் ஒருவர், தேசியளவில் தனியாக பேச வேண்டியதில்லை. அவர் இந்த தேசத்தில்தான் இருக்கிறார். தேசம் தொடர்பான கொள்கைகளில் நல்லதை வரவேற்பார். கெட்டதை எதிர்ப்பார். அவருக்கு நாங்கள் துணை நிற்போம்."

LIVE 24 X 7