சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அவர் பேசுகையில், “உரிமைக்காகவும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மே முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முதன் முதலில் மே முதல் நாளை சென்னையில் தான் கொண்டாடத் தொடங்கினோம்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தலைமையில் தான் சென்னை மாநகரில் முதன்முதலில் இந்த மே முதல்நாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. உழைப்புக்கு ஏத்த உதியும் தொழிலாளர்களுக்கான உரிமை அதேபோல் நம்முடைய கழகத் தோழர்கள் உழைத்திருக்கக்கூடிய உழைப்பிற்கான பலன் வரும் நான்காம் தேதி பெறவிருக்கிறோம், அதில் ஒரு துளி அளவும் எந்த மாற்றமும் இல்லை.
கருத்துக்கணிப்பு அடிப்படையில் நான் சொல்கிறேன் என்ற அவசியம் இல்லை கழக உணர்வை உணர்ந்து கொண்டிருக்க கூடிய காரணத்தினால் அந்த கருத்தை நான் எடுத்து வைத்திருக்கிறேன் தவிர வேறில்லை. அதே நேரத்தில் முதல் நாளை தொழிலாளருக்கு உரிய மரியாதை மதிப்பை உரிமையை இன்று கொண்டாட கூடிய வகையில் இந்த நாளை நாம் கொண்டாடி வருகிறோம்.
மே முதல் நாள் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் அரசு விடுமுறையாக அறிவித்து மே தினத்தை கொண்டாடத் தொடங்கினார். ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக மட்டுமில்லாமல் அந்த விடுமுறை நாளை சட்டம் ஆக்கிக் கொடுத்தவர் அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்ற நம்முடைய கலைஞர்.
தமிழ்நாட்டில் மட்டும்தான் மே முதல் நாள் கொண்டாடப்பட்டு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா முழுவதும் இந்த விடுமுறை நாளை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று கலைஞர் நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் மூலம் குரல் எழுப்பப்பட்டது. அதையடுத்து அப்போதைய பிரதமராக இருந்த வி.பி சிங் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அரசு விடுமுறையாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்ட நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும். இந்த சூழ்நிலையில் நான் தெரிவித்துக் கொள்வது எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தோடுதான் அந்தக் கொள்கையோடு தான் நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம் அது தொடரும்" என்று கூறினார்.

LIVE 24 X 7