தமிழ்நாடு

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.680 குறைந்துள்ளது.

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை மீண்டும் சரிவு!
Gold Rate
கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து ஆறுதலை அளித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் சரிவைக் கண்டுள்ளது.

நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து நேற்றும் விலை அதிகரித்து, சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,320-ஆகவும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,205-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையிலும் இன்று சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகி வருகிறது.