தமிழ்நாடு

மக்களே உஷார்! தமிழகம்,புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை...

இன்று சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களே உஷார்! தமிழகம்,புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை...
TN Weather Report August 19
இது குறித்து வானிலை அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது, தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக இன்று செங்கல்பட்டு,விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் காரைக்காலல் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நாளை (19.08.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வட கடலோர தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைப் பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைப் பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்பநிலை:-

இன்று முதல் வருகின்ற 23 ஆம் தேதி வரையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு எனவும் உள் தமிழகத்தில் சற்று வெப்பநிலை மாற்றம் உயரக்கூடும் என்றும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விடவும் அதிகமாகவும் ஏனைய தமிழகம்,புதுவை,மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,வெப்பநிலை பொறுத்த வரையில் அதிகப்பட்சமாக 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் இரவு நேரங்களில் மட்டும் ஒரு சில நகரங்களில் இடி மின்னலுடன் கூடி லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வெப்பநிலை பொறுத்த வரையில் அதிகபட்சமாகவும் 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்று வானிலை ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.