தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ரேஷன் அரிசி பயன்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய கருத்து எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவை நிகழ்வுகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கியதும், கேள்வி நேரம் தவிர்க்கப்பட்டு நேரமில்லா நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, சவுதி அரேபியாவில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதுகுறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து உணவு, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறைகள் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கள் ஆட்சிக் காலத்தில் நெல் மூட்டைகளை நனைய விடாமல் குடோன்களில் பாதுகாத்து, மக்களுக்குக் தரமான வெள்ளை நிற அரிசி கிடைக்க வழிவகை செய்ததாகக் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மக்கள் ஆடு மற்றும் கோழிகளுக்குத்தான் உணவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை என்று கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் உடனடியாகக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து மீண்டும் விளக்கிய அமைச்சர், "தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி குறைவாக உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து பெற வேண்டியுள்ளது. சன்ன ரக நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகளுக்கான கூலியை முதலமைச்சர் உயர்த்தியுள்ளார். ரேஷன் அரிசியைச் சிலர் பயன்படுத்துவதில்லை என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு குறிப்பிட்டேன்" என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.

LIVE 24 X 7