தமிழ்நாடு

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!

தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தவெக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு!
TVK Cabinet
தமிழக அமைச்சரவை இன்று காலை விரிவாக்கம் செய்யப்பட்டு 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர்களுக்கான அரசுத் துறைகளை (இலாகாக்கள்) முதலமைச்சர் ஜோசப் விஜய் முறைப்படி ஒதுக்கீடு செய்துள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, புதிய அமைச்சர்களின் பட்டியலும் அவர்களுக்கான துறைகளும் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. இதில் நிதி, உயர்கல்வி, இந்து சமய அறநிலையம் உள்ளிட்ட முக்கியத் துறைகள் புதிய அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 59 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவையில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு உயர்கல்வி மற்றும் சுற்றுலா ஆகிய முக்கிய இலாகாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய மற்றும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களின் துறைகள்

முதலமைச்சரின் நெருங்கிய நண்பரான தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியின் அமைச்சரான மேலூர் எம்.எல்.ஏ விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறையும், கிள்ளியூர் எம்.எல்.ஏ ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய அமைச்சர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இதர அமைச்சர்கள் மற்றும் அவர்களின் துறைகளின் விவரம்:

நிதித்துறை: மரிய வில்சன்

மீன்வளத்துறை: ஸ்ரீநாத் (தூத்துக்குடி)

கால்நடைத்துறை: கமலி (அவிநாசி)

உயர்கல்வித்துறை: விஸ்வநாதன் (மேலூர் - காங்.)

சுற்றுலாத்துறை: ராஜேஷ் குமார் (கிள்ளியூர் - காங்.)

வனத்துறை: ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)

பால்வளத்துறை: விஜயலட்சுமி (குமாரபாளையம்)

வேளாண் துறை: வினோத் (கும்பகோணம்)

சுற்றுச்சூழல்த்துறை: ராஜீவ் (திருவாடனை)

வீட்டுவசதித்துறை: ராஜ்குமார் (கடலூர்)

கூட்டுறவுத்துறை: காந்திராஜ் (அரக்கோணம்)

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை: மதன்ராஜா (ஓட்டபிடாரம்)

சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை: ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

கைத்தறி மற்றும் ஜவுளித்துறை: விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை: லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)

செய்யறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை: குமார் (வேளச்சேரி)

வெளிநாடுவாழ் தமிழர் நலன்: தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை: சம்பத் குமார் (கோவை வடக்கு)

தொழிலாளர் நலத்துறை: முகமது பர்வேஸ் (அறந்தாங்கி)

மனிதவளத்துறை: சரத்குமார் (தாம்பரம்)

இந்து சமய அறநிலையத்துறை: ரமேஷ் (ஸ்ரீரங்கம்)

போக்குவரத்துத்துறை: விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)