K U M U D A M   N E W S

தமிழ்நாடு

'நீதிமன்றத்திற்கு நேரில் வரவழைக்கப்படுவீர்கள்'- நடிகை மற்றும் சீமானுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

இருதரப்பும் மன்னிப்பு கேட்டு வழக்கை முடித்துக்கொள்ளவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்படுவார்கள் என்று சீமான் மற்றும் விஜயலட்சுமிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபரில் வடகிழக்கு பருவமழை: பாதிப்புகளைத் தடுக்க தமிழக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க வாய்க்கால்கள் தூர்வாருதல், சாலைகள் சீரமைப்பு மற்றும் நிவாரண முகாம்கள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளைத் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

ரஜினி, விஜய் பட நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

ரஜினி, விஜய் படங்களில் பணியாற்றிய நடன கலைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்

தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.

குடியாத்தத்தில் மிளகாய் பொடி தூவி கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தை கடத்தில் விவகாரத்தில் போலீசார் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டனர்

விருத்தாசலத்தில் அதிகாரிகள் முறைகேடு புகார் – 3 லட்சத்தை ஏமாந்து நிற்கு மூட்டை தூக்கும் தொழிலாளி

அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் உடை சர்ச்சை: கல்லூரி மாணவி VS வியாபாரிகள் - இருதரப்பும் புகார்!

கோயம்புத்தூர் பூமார்க்கெட்டில் ஒரு கல்லூரி மாணவியின் உடை தொடர்பாக எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விவகாரத்தில் மாணவி மற்றும் பூ வியாபாரிகள் இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல்: கல்லூரி மாணவர்கள் வெறிச்செயல்!

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு கல்லூரி மாணவர் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. ஒரு மாணவரிடம் இருந்து நகைகள் பறிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் புகுந்து தாக்குதல்: ஓய்வு பெற்ற அதிகாரி குடும்பத்தினர் மீது ரவுடி, திருநங்கைகள் கும்பல் வெறிச்செயல்!

சென்னை கோயம்பேட்டில் வாடகை வீட்டு விவகாரத்தில், ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அதிகாரியின் வீட்டில் புகுந்து தாக்கிய ரவுடி, வழக்கறிஞர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எடப்பாடி மக்களுக்குக் கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி!

எடப்பாடி மக்கள் மீது கவலைப்பட்டிருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு காட்டமான கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. சென்னையில் பரபரப்பு!

சென்னையில் உள்ள அதிமுக அலுவலகம், நடிகர் எஸ்.வி. சேகர் வீடு உட்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சற்றே குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

சூளைமேடு விவகாரம்: 'பொறுப்பு அதிகாரி யார்? - மாநகராட்சிக்கு மீண்டும் கடிதம் அனுப்பிய போலீஸ்!

சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், பொறுப்பு அதிகாரி யார் என விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சிக்கு சூளைமேடு போலீசார் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

சூர்யா வீட்டு வேலைக்கார கும்பல் ரூ. 42 லட்சம் மோசடி: தலைமறைவாக இருந்த 4 பேர் கைது!

டிகர் சூர்யாவின் வீட்டில் வேலை செய்த சுலோச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர், குறைந்த விலையில் தங்கக் காயின் தருவதாகக் கூறி சூர்யாவின் தனி பாதுகாவலர் உட்பட பலரிடம் ரூ. 2 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். 3 மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குழந்தை திருமண வழக்கில் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது!

கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கேட்ட இன்ஸ்பெக்டர்; ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்!

மருதமலை கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்

நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்

“எட்டப்பன் துரோகி இல்லை; தவறான தகவல் பரப்பப்படுகிறது” – எட்டயபுரத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

எட்டப்ப மகாராஜா பற்றி அரசியல், பாடப்புத்தகம் என எதிலும் தவறாக சித்தரித்து இடம் பெறக்கூடாது என வலியுறுத்தல்

விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறும் – நடிகர் தாடி பாலாஜி நம்பிக்கை

தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி பேட்டி

சுகுணா குழுமத்தில் வருமானவரித்துறை சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியது?

சோதனையில் தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

கைகள் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் சடலம்.. கொலையா? தற்கொலையா?

விருத்தாசலம் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், தூக்கில் தொங்கிய இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமிரியில் மதிய உணவிற்கு பிறகு பள்ளி சிறுவன் மர்ம மரணம் – பெற்றோர் அதிர்ச்சி

ஒரே உணவை 2 குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பெற்றோர் புகார்

“என்ன தொட்டான்..அவன் கெட்டான்” – ரோபோ சங்கர் படத்துடன் மது விழிப்புணர்வு போஸ்டரால் பரபரப்பு

விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட போஸ்டருக்கு பலரும் கண்டனம்

திமுக ஆட்சியில் உடல் உறுப்புகளை திருட ஆரம்பித்துவிட்டனர் – இபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சி அமைந்ததும் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை நீக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்