K U M U D A M   N E W S

தமிழ்நாடு

ஒரே நாளில் இருமுறை தங்க விலை உயர்வு.. 2 நாட்களில் சவரனுக்கு ரூ.2,800 அதிகரிப்பு!

தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,800 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை.. 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளத்தூரில் பயங்கரம்: நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன் அடித்துக் கொலை!

சென்னை கொளத்தூரில் நண்பனுக்காகச் சண்டையிடச் சென்ற 16 வயது சிறுவன், மற்றொரு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் 9.7 கிலோ குட்கா பதுக்கல் - வடபழனியில் முதியவர் கைது; போலீசார் தீவிர விசாரணை!

வடபழனியில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த 68 வயதான முதியவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9.7 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பள்ளி சீருடையில் சிகரெட் பிடிக்கும் பள்ளி மாணவர்கள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 14-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு!

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தனிநபர் விவகாரத்தை எவ்வாறு பொதுநல வழக்காக தாக்கல் செய்யலாம்? - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கேள்வி!

கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் நான்கு இளைஞர்கள் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், சிபிஐ விசாரணை கோரிய பொதுநல வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

சென்னை ராயப்பேட்டை மாலில் சோகம்: விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு - மனைவி புகார்!

சென்னை ராயப்பேட்டை தனியார் மாலில் நடந்த விபத்தில், 38 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்: ஒரு சவரன் ரூ.84,000-ஐ தொட்டது!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஏழை மக்களுக்கு நற்செய்தி: உஜ்வாலா திட்டம்: 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள்!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு 25 லட்சம் புதிய இலவச LPG இணைப்புகள் வழங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு: கோவை வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி! நேரில் ஆய்வு செய்த வானதி சீனிவாசன்!

நாடு முழுவதும் ஜிஎஸ்டி 2.0 வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் தாக்கம் குறித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தார்.

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

11 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுப்பார்கள் - ஜாய் கிரிஸில்டா

சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: விஏஓ அதிரடி கைது

திருவண்ணாமலை அருகே வாரிசு சான்றிதழ் வழங்க 2000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கைது: திரை பிரபலங்களுக்கு சப்ளை செய்தாரா?

சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - அண்ணாமலை சரமாரி கேள்வி

அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை உள்ளதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

ரூ.83,000-ஐ கடந்த தங்கம் விலை.. ஒரே நாளில் இருமுறை உயர்வு!

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

மூழ்கிய தரைப்பாலம்: தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள்…ஆட்சியருக்கு கோரிக்கை

தண்ணீர் அதிகமாக வருவதால் தேர்வு எழுத முடியாமல் தவிக்கும் மாணவர்கள், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணாமலைக்கு எதிராக வழக்கு – டி.ஆர்.பாலு நீதிமன்றத்தில் ஆஜர்

அடுத்த மாதம் 13ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்புள்ளது என பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் பேட்டி

தவெகவில் செங்கோட்டையன் இணைய திட்டமா? - எஸ்.பி வேலுமணி ரியாக்‌ஷன்

அ.தி.மு.க ஆட்சியில் செய்யப்பட்டது போல அதிக வன ஊழியர்களை நியமிக்க வேண்டும் என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Heavy Rain: கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்கடலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூரில் பயங்கரம்: காதலுக்கு எதிர்ப்பு; இளைஞர் ஓட ஓட விரட்டிப் படுகொலை!

தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் கொண்ட கும்பல், இளைஞர் ஒருவரை ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இரிடியம் மோசடி வழக்கு: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இரிடியம் மோசடி வழக்கில் மூளையாகச் செயல்பட்ட சாமிநாதனை, மதுரை சிபிசிஐடி போலீசார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.