K U M U D A M   N E W S

தமிழ்நாடு

திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி போலீசார் சித்ரவதை.... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை..

திருட்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த டிராவல்ஸ் உரிமையாளரை, அதே திருட்டை ஒப்புக்கொள்ள கூறி சித்ரவதை செய்த போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது

ஜப்தியாகும் சிவாஜி வீடு! குடும்பத்தில் மோதல்? பரிதாபத்தில் அன்னை இல்லம்!

நடிப்புக்கே இலக்கணமாக திகழ்ந்த சிவாஜியைப் போல, அவர் ஆசை ஆசையாக வாங்கிய அன்னை இல்லமும் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். ஆனால், தற்போது அந்த அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற நீதிமன்ற உத்தரவால், சிவாஜி குடும்பத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு: செல்வ வரி ஆவணங்கள் முழுமையாக இல்லை - வருமான வரித்துறை

முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம்.. நிலம் கையகப்படுத்தும் ஆட்சியரின் அறிவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் இடையே நடை மேம்பாலம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு.. ஜவுளி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு..!

இலவசம் எனக்கூறி கேரி பேக்கிற்கும் பணம் வசூல் செய்த ஜவுளி நிறுவனம், அதன்  வாடிக்கையாளருக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவாஜி கணேசன் வீட்டில் எனக்கு உரிமை இல்லை.. மகன் ராம்குமார் தகவல்

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டில்  தனக்கு எந்த பங்கும்  இல்லாத நிலையில் அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மெரினா அருகே வாகன சோதனையில் சிக்கிய 28 கிலோ தங்கம்.. தீவிர விசாரணையில் போலீஸார்

Gold Seized in Chennai Marina Beach : சென்னை மெரினா அருகே வாகன சோதனையின் போது பிடிப்பட்ட 28 கிலோ தங்க நகைகளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

“எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்!” மீண்டும் சைலண்ட் மோடில் நடிகை சீமான் நிம்மதி பெருமூச்சு!

சீமான் விவகாரத்தில், இதுக்குமேல் போராட விருப்பமில்லை என அவர் மீது பாலியல் புகாரளித்த நடிகை புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தையே சூடாக வைத்திருந்த இந்த பஞ்சாயத்து, தற்போது புஷ்வானமாக போய்விட்டதாக தெரிகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

சிறுமிக்கு பாலியல் தொல்லை சிறுவனை சிக்க வைத்தது யார்? வெளியான அதிர்ச்சி தகவல்!

சீர்காழியில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவத்தில், சிறுவன் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தங்களது சந்தேகமே அவர்கள் மீது தான் சிலரை கை காட்டியுள்ளனர் சிறுமியின் பெற்றோர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும், கைதான சிறுவனின் பெற்றோரும் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்களை இப்போது பார்க்கலாம்....

சுற்றுலா வாகனங்கள் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் - தமிழக அரசு

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையை கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை  இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.