போகிப்பண்டிகை கொண்டாட்டம்... பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிப்பு
சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையம் ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க சென்னை ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். மெட்ரோ பணிகள் மற்றும் மேம்பாலப் பணிகள் காரணமாக கடந்த ஆண்டை காட்டிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது. இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறதா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது, இது அவர்களுக்கான பலவீனத்தை காட்டுகிறது, இந்த நிலைப்பாடு அதிமுக சரிவுக்கான புள்ளியாக அமையும் என்று திருமா கருத்து தெரிவித்துள்ளார்.
போரூரில் பிரபல தனியார் பேக்கரி கடையில் இருந்து வாடிக்கையாளர் வாங்கி சென்ற கேக்கில் புழுக்கள் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் வாடிவாசல் இருந்து வெளியேறிய பிறகு தப்பிச் செல்லாமல் இருக்க 1.8 கிமீ தொலைவிற்கு இரும்பு தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.