மெட்டாவில் 24 வயது இளைஞருக்கு ரூ. 2,196 கோடி சம்பளம்.. மாட் டீட்கேவின் திறமையை நம்பும் மெட்டா!
மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.
மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ.9,516.8 கோடியை தாண்டியதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் தகவல் வெளியாகியுள்ளது. 2023ம் ஆண்டு தொடக்கத்தில் ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் பங்குகள் உயரத் தொடங்கி தற்போது 120% உயர்வை சந்தித்துள்ளதால், சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பில் இந்த ஏற்றம் என கூறப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
புழல் பகுதியில் 40 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் தான் சொந்தமாக வாங்கிய இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெளிநாட்டுப் பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பின் மூலம் அமெரிக்க அரசுக்கு இந்தாண்டு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த அண்டு இறுதிக்குள் ரூ.26 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என அமைச்சரவை கூட்டத்தில் அந்நாட்டு நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டார்க்நெட் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட “கெட்டாமெல்லன்” என்று அழைக்கப்படும் கும்பலைச் சேர்ந்த கொச்சின் சேர்ந்த எடிசன் பாபு என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு கைது செய்துள்ளது. ஆப்ரேஷன் MELON என்ற சோதனை நடவடிக்கையில் 1 கோடிக்கும் அதிக மதிப்புள்ள எல்எஸ்டி, கெட்டமைன் மற்றும் கிரிப்டோகரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 1.65 கோடி ஏமாற்ற விட்டு தலைமறைவாக இருந்தவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று பெற ரூ.18 கோடிக்கு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியா - மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்னை ஏற்பட்ட நிலையில், இருநாடுகளும் பேச்சுவார்த்தையை ஈடுபட்டதையடுத்து இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலை திரும்பியதால், இந்தியா - மாலத்தீவு இடையே 55 கோடி ரூபாய் மதிப்பிலான13 திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய கொக்கையின், கஞ்சா பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஜாம்பியா நாட்டைச்சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிருத்திவிராஜ் - மோகன்லால் கூட்டணியில் வெளிவந்த எல்-2: எம்புரான் திரைப்படம் மலையாள திரையுலகில் ரூ.250 கோடி வசூலைக் கடந்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு, ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையை அடுத்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்தால் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 15 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தால் ஏற்றுக் கொள்வாரா? என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 50 கோடி பேர் புனித நீராடல்