K U M U D A M   N E W S

செந்தில்

'நான் யானை அல்ல.. குதிரை' செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்தால் பரபரப்பு!

கோவையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

செந்தில் பாலாஜி வழக்கு.. முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்.. பொன்முடி-செந்தில் பாலாஜி விடுவிப்பு

தமிழக அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.

கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது – சசிகாந்த் செந்தில் எம்.பி.,

திருடர்களை நம்பி அதிமுக வீட்டை ஒப்படைத்து இருப்பதாகவும், பாஜக வளர்வதற்கு தமிழகத்தில் நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் செயலில் அதிமுக செயல்பட்டு இருப்பதாக சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

"கோடை காலத்தில் மின்தடை ஏற்படாது" - அடித்து சொல்லும் செந்தில் பாலாஜி

"மின் தேவையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

EB Connection கேட்ட TVK Velmurugan “MLAவா இருந்தாலும் சட்டம் சட்டம் தான்” சட்டபேரவை சுவாரஸ்யம் | DMK

வேல்முருகன் எம்.எல்.ஏ கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆன்லைன் மோசடி..! பணத்தை இழந்த நடிகர்! அழுவதா? சிரிப்பதா?

எவ்வளவு தான் நாம நெறய படிச்சி உலக அறிவோட இருக்கோம்னு நினச்சாலும், ஒருத்தன் ஆன்லைன் மோசடி பண்ணிட்டு போய்ட்டான் என வேதனை தெரிவித்து பிரபல சின்னத்திரை நடிகர் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் செந்திலுடன் இணையும் கூல் சுரேஷ்... பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!

கூல் சுரேஷ்  மற்றும் நகைச்சுவை மன்னன் செந்தில் நடிப்பில், உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் சாட்சி விசாரணைக்கு அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடத்த முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி.

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

"என்னோட Role Model நம்மளோட CM .."செந்தில் பாலாஜி பேச பேச அள்ளிய கிளாப்ஸ்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு 50 ஆண்டு கால உழைப்பை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனது ரோல் மாடல் என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

செந்தில்பாலாஜி விஷயத்தில் சந்தேகப்பட்டது சரிதான்.. உச்சநீதிமன்றமே சொல்லிடுச்சு - ராமதாஸ்

செந்தில் பாலாஜி வழக்கில் தனது ஐயம் சரியானது தான் என்பது, உச்சநீதிமன்ற கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஜாமினில் வெளிவந்ததும் அமைச்சர் பதவியா..? செந்தில் பாலாஜிக்கு நீதிபதி கண்டனம்

ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி பொறுப்பேற்க முடியும் என்று  உச்ச நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்

குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.

“இது கூட்டுறவு வார விழா அல்ல நமது குடும்ப விழா” - செந்தில் பாலாஜி உற்சாகம்

மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: வெளிவந்த புதிய அப்டேட்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு - எதிர்பார்க்காத திருப்பம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

"நிதி நிறுவன கடன் வட்டியை குறைக்க வேண்டும்” - மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மத்திய அரசின் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டியை 8 சதவீதமாக குறைக்க வேண்டும் என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் - ஜெயக்குமார்

சீமான் சேற்றை வாரி இறைக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.