K U M U D A M   N E W S
Promotional Banner

தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம்.. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்!

பிகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்கும் அதேநேரத்தில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 6.5 லட்சம் பேர் வாக்காளர்களாகச் சேர்ப்பது ஆபத்தானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்: மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்குக் கனமழை மற்றும் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை: டெல்டா மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறப்போகும் பீகார் மக்கள்? - சீமான் சொல்லும் அதிர்ச்சி தகவல்

தமிழர் அரசதிகார உரிமையைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று சீமான் எச்சரிக்கை

ISIS அமைப்புடன் தமிழகத்தை சேர்ந்த நபருக்கு தொடர்பு.. NIA குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப் பட்டியலில் 40 மருந்துகள்.. 3 நிறுவனங்கள்: TNMSC அதிரடி நடவடிக்கை!

தமிழக மருத்துவ பணிகள் கழகம் (TNMSC) தரமற்ற மருந்துகள் என 40 மருந்துகளையும், 3 மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் கருப்புப் பட்டியலில் சேர்த்து உத்தரவிட்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில், 452 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இன்றிரவு திறந்து வைக்கிறார். பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

கழிவறைக்குள் ரேஷன் அரிசி மூட்டைகள்- பொதுமக்கள் அதிர்ச்சி

கழிவறைக்குள் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“தமிழகத்தின் குரல் டெல்லியில் ஒலிக்கும்”- கமல்ஹாசன்

மக்களின் எண்ணங்களையும், ஏக்கங்களையும் பிரதிபலிப்பதே எனது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆடி அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஓடிபி ஏன் கேட்குறீங்க? திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரச்சாரத்திற்கு சிக்கல்

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பிரச்சார இயக்கம் நடைப்பெற்று வரும் நிலையில், பொதுமக்களிடம் ஓடிபி (OTP) பெற இடைக்காலத் தடை விதித்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

குற்றம் சாட்டியவர்களையே பணிநீக்கம் செய்யும் திமுக அரசு- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எழும் குற்றச்சாட்டுகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதோடு, அவ்வாறு குற்றம் சாட்டியவர்களையே திமுக அரசு பணிநீக்கம் செய்வது கடும் கண்டனத்திற்குரியது” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும்- சிபிஎம் வலியுறுத்தல்

நீதிமன்ற தீர்ப்புகள் குடிசைகளை குறிவைக்கப்படும் நிலையில், மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 2 பேர் பலி...தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் எல்லாவற்றையும் திருடுவார்கள்…நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக ஆட்சியில் கிட்னியும் திருடுவார்கள், எல்லாவற்றையும் திருடுவார்கள் என நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளியை ஏமாற்றி கிட்னி திருடிய சம்பவம் குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்

காமராஜரை பற்றி பேசுவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது – சசிகாந்த் செந்தில் எம்.பி.

காமராஜரை பற்றி பேசுவதற்கு தான் உட்பட யாருக்கும் அருகதை கிடையாது என திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்பு…பழங்குடி பெண் அசத்தல்

படித்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்றுள்ள பழங்குடி பெண்ணுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஊர் ஊராக சென்று வருகிறார் - நயினார் நாகேந்திரன்

ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது என நயினார் நாகேந்திரன் பேட்டி

மருத்துவக் கல்வி சேர்க்கை.. போலிச் சான்றிதழ் பயன்படுத்திய 20 மாணவர்கள் கண்டுபிடிப்பு!

தமிழகத்தில் இளங்கலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் இதுவரை 20 விண்ணப்பதாரர்கள் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டது- டிடிவி தினகரன் விமர்சனம்

நோய்களைக் குணப்படுத்த வேண்டிய அரசு மருத்துவமனைகளே நோய்களை உற்பத்தியாக்கும் மையமாகச் செயல்படுவதா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

18 இடங்களில் வருமானவரி சோதனை.. தமிழகத்தில் ₹550 கோடி வருமான வரி மோசடி!

தமிழகத்தில் வருமான வரி செலுத்துவோர் மிகப்பெரிய வருமான வரி மோசடி தொடர்பாக 18 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சுமார் 550 கோடிவரை போலியாக வருமானவரி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தியான VinFast VF6, VF7 மாடல்கள்.. இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்!

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் தனது முதல் 2 மாடல் மின்சாரக் கார்களுக்கான VinFast நிறுவனம் முன்பதிவைத் தொடங்கியது. VinFastAuto.in என்ற இணையதளத்தில் VF6 மற்றும் VF7 மாடல் கார்களை ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? நயினார் நாகேந்திரன் கேள்வி

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.