K U M U D A M   N E W S

“சிலர் எழுதிக்கொடுப்பதை தவறாக பேசுகிறார்கள்” – விஜய்க்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி

தமிழகத்தில் அலையாத்தி காடுகள் குறைவாக இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு

ஆள் வைத்து பொய் கதை பரப்புகிறார்கள் – விஜய் குற்றச்சாட்டு

ஒவ்வொரு நாளும் மக்களிடையே தவெகவுக்கு பெருகும் ஆதரவைக்கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என விஜய் தெரிவித்துள்ளார்

விஜய் செல்லும் இடங்களில் இதுபோன்ற செயல் சரியல்ல – நயினார் நாகேந்திரன்

விஜய் மற்ற தலைவர்களை ஒப்பிட்டு பேசுவதும் சரியானதாக இருக்காது என நயினார் நாகேந்திரன் கருத்து

நாகை, திருவாரூரில் விஜய் இன்று பரப்புரை- உற்சாக வரவேற்பளிக்க தவெகவினர் ஏற்பாடு

நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் மக்கள் மத்தியில் விஜய் பேச உள்ளார்.

விஜய் மக்கள் சந்திப்பு – தவெகவினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தல்

விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், தவெக தொண்டர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

நடிகர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? –திமுக அரசுக்கு விஜய் கேள்வி

தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் என விஜய் தெரிவித்துள்ளார்.

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம் – தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம் என விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு

சட்டசபைக்கு கூட வர முடியாது – தவெக தலைவர் விஜய்க்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

நடிகர் ரஜினிகாந்துக்கு நான் போன் செய்து பேசி விட்டேன்.ரொம்ப தேங்க்ஸ் சார், இப்போது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று அவரிடம் கூறினேன் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அஜித்குமாருக்கு நீதி வேண்டும்..சிறப்புப் புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தல்

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தல்

திருப்புவனத்தில் இளைஞர் மரணம்: வழக்குப்பதிந்து கைது செய்க- தவெக வலியுறுத்தல்

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணத்தில் தவறிழைத்த காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.

விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் - ஜவாஹிருல்லா விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்டு வருகிறார் என்று மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

குடும்ப சுயநலத்திற்காக பாஜகவிடம் திமுக அடைக்கலம்- விஜய் கடும் விமர்சனம்

ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்த நிர்வாகி...துப்பாக்கி முனையில் வெளியேற்றம்

மதுரை விமான நிலையத்தில் விஜய்க்கு சால்வை அணிவிக்க வந்தவரை துப்பாக்கி முனையில் வெளியேற்றியதால் பரபரப்பு

கோவைக்கு வருகை தந்த விஜய்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“தவெக ஆட்சிக்கு வருவதே மக்கள் நலனுக்காக தான்”- கோவையில் விஜய் பேச்சு

மனதில் நேர்மையும் கரை படியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் உள்ளது என விஜய் பேச்சு

வேக வேகமாக வந்த புஸ்ஸி ஆனந்த்...மேடையில் இருந்து இறங்கிய விஜய்...தவெக கூட்டத்தில் பரபரப்பு

தவெகவின் கொள்கைத்தலைவர்கள் படங்களுக்கு விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்...தவெக தலைவர் விஜய்

என் பாசத்துக்குரிய பரந்தூர் மக்களே, நம்பிக்கையோடு இருங்கள், நாளை நமதே என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக வெளியிட்ட அறிக்கை.. பூத் கமிட்டி கருத்தரங்கில் தலைவர் விஜய் பங்கேற்பு!

கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

“பிளவுவாத பாஜக...மக்கள் விரோத திமுக”- தவெக தலைவர் விஜய் சாடல்

தி.மு.க.வை மறைமுகக் கூட்டாளியாக ஏற்கெனவே தயார் செய்துவிட்ட நிலையில், தன்னுடைய பழைய பங்காளியான அ.இ.அ.தி.மு.க.வைப் பகிரங்கக் கூட்டாளியாகப் பா.ஜ.க. மீண்டும் கைப்பிடித்துள்ளது