நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருணாள் தாக்கூர் இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது, மிருணாள் தாக்கூர் தனது பிறந்தநாள் பார்ட்டியில் தனுஷுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி ஜூலை 27 மற்றும் 28 தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு வருகை தருவதாகவும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூலை 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 8 நாள் சுற்றுப்பயணமாக வரை 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் இருநாட்டுகளின் உறவுகள், பொருளாதார ஒத்துழைப்புகள் மற்றும் உலகளாவிய நிலைப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்தில் அமைந்துள்ளது.
ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை வில்லிவாக்கத்தில் தவெக பேனர் சரிந்து முதியவர் காயமடைந்தார்.இந்த வழக்கில் தவெகவினர் 3 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த 70 வயது முதியவர் மோகனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
நார்வே செஸ் 2025 போட்டியின் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் டி. குகேஷ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். 19-வது பிறந்த நாளை கொண்டாடிய குகேஷ், அமெரிக்காவின் முன்னணி கிராண்ட்மாஸ்டர் ஹிகரு நகமுராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டுள்ளார். விண்வெளி செல்லும் 3 வீரர்களையும், நாசா குழுவினர் உடல்நிலையை தகுதிப்படுத்தும் குவாரண்டைனுக்கு அனுப்பிவைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி மறுத்ததை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தேர்தல் அரசியலில் களமிறங்குவது குறித்த வியூகத்தை சசிகலா முன்னெடுக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தலில் களமிறங்கிறாரா சசிகலா? எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார்? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.