நடிகர் விஷால் தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவுடன் இன்று எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுகுறித்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் விஷால் வெளியிட்ட அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.
வாக்குறுதியைக் காப்பாற்றிய விஷால்
முன்னதாக, ஒரு படத்தின் விழாவில் தன்ஷிகா உடனான தனது காதலை நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். அப்போது, நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் முடிந்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று அவர் உறுதியளித்திருந்தார். நடிகர் சங்கத் தேர்தல் சமயத்தில், புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும் அதில் தனது திருமணம் தான் முதலில் நடக்கும் என்று விஷால் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாய் தன்ஷிகாவின் பெயர் பொறித்த மோதிரம்
நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், "இதுதான் நான் பேச்சுலராகக் கொண்டாடும் கடைசிப் பிறந்தநாள். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், நிச்சயதார்த்த மோதிரத்தில் தன்ஷிகாவின் பெயர் பொறிக்கப்பட்டிருந்ததையும் அவர் பெருமையுடன் காட்டினார்.
நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடைந்துவிடும் என்றும், அதன் பிறகு திருமணத் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் விஷால் தெரிவித்தார். தனது பிறந்தநாளில் திருமணம் செய்யத் தன்ஷிகா விரும்பியதாகவும், ஆனால் நடிகர் சங்கக் கட்டிடத்திற்காகக் காத்திருக்க தான் கேட்டுக்கொண்டதாகவும் விஷால் குறிப்பிட்டார்.
9 ஆண்டுகளாக நடந்து வந்த நடிகர் சங்கக் கட்டிடப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், விஷாலின் இந்த அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.