K U M U D A M   N E W S

நீட்

“கல்வி மட்டுமே காப்பாற்றும்”- நீட் தேர்வு எழுதிய திருநங்கை நம்பிக்கை

கோவையில் 2வது முறையாக நீட் தேர்வு எழுதிய திருநங்கை, கல்வி ஒன்றே தங்களை எதிர்காலத்தில் காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

நீட் தேர்வு நிறைவு...மாணவர்கள் சொல்வது என்ன?

இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தவறான தேர்வு மையத்தில் காத்திருந்த மாணவி... தேர்வு எழுத முடியாமல் கலங்கிய படி சென்றதால் சோகம்

தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார்.

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் திமுகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை – முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஆட்சியில் 412 இடங்களில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.அப்பயிற்சியை கூட திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும்-கனிமொழி எம்.பி.,

எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் கோவில் நிலத்தில் இடம் கேட்டால் கொடுக்க முடியுமா? வக்ஃபு போர்டில் எதற்கு இஸ்லாமியர் இல்லாத ஒருவரை நியமிப்போம் என்பது ஏற்புடையதல்ல.

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.. அரசின் சரியான நடவடிக்கைக்கு சான்று!

மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் நீட் தேர்வு அரசியல் மோசடி...திமுகவை சரமாரியாக சாடிய விஜய்

தொடர் அரசியல் மோசடி மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம், 2026 சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடியை மக்கள் தரப் போகின்றனர்.

அனைத்துக்கட்சி கூட்டம்:அதிமுக பங்கேற்காது- இபிஎஸ் அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு நடத்தும் நாடகம் என இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு: குணால் கம்ரா இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நகைச்சுவை கலைஞர் குணால் கம்ராவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால முன்ஜாமினை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது

மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நீட் நுழைவுத் தேர்வு ஒரே நாளில், ஒரே கட்டமாக நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது - திருமாவளவன் பேச்சு

நீட்டை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது. கல்வி தொடர்பான அதிகாரம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் பொதுவான பட்டியலில் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

நீட் விவகாரம் - திமுக அரசுக்கு விஜய் சரமாரி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது, மாநில அரசுக்கு இல்லை என தற்போது கூறியுள்ளனர் - விஜய்

நெல்லை நீட் பயிற்சி மையம் விவகாரம்... மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு| Kumudam News 24x7

நீட் பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக நெல்லை போலீசார் உத்தரவு.

நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்கள் மீது தாக்குதல்... வேட்டையன் பட பாணியில் அத்துமீறல்... பகீர் வீடியோ

நெல்லையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில், மாணவர்கள் மீது ஆசிரியர் கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு |

மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் NEXT தேர்வு - வெளியானது அறிவிப்பு

மருத்துவ கனவை நனவாக்கிய ஏழை மாணவர்கள்..கொண்டாடித் தீர்க்கும் ஊர் மக்கள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மருத்துவ கனவை எட்டிப்பிடித்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

NEET PG 2024 Results : வெளியானது நீட் முதுகலை தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துக்கொள்வது?

NEET PG 2024 Results : ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதுகலை நீட் தேர்வுக்கான முடிவுக்ள வெளியானது.

'நீட் விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் எடப்பாடி பழனிசாமி'.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

''நீட் தேர்வு விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை. அனைவரும் எழுதிதான் ஆக வேண்டும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நீட் தேர்வை பொறுத்தவரையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது’’ என சொன்னது பழனிசாமியின் உதடுகள்தானே'' என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

'நீட்' ரத்து ரகசியத்தை எப்போது சொல்வீங்க உதயநிதி?.. கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி!

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தது. மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், ''திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும்’’ என்று கூறியிருந்தார்.

'நீட் தேர்வை ரத்து செய்ய இது போதும்'.. காரணங்களை பட்டியலிட்ட அன்புமணி!

''தருமபுரி மாணவியைப் போலவே மேலும் பல மாணவ, மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு கண்டனம் தெரிவித்தும், சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும் என்றும் கடந்த 4-ஆம் தேதி பா.ம.க. வலியுறுத்தியிருந்தது'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

NEET Exam 2024 : 'ஹே எப்புட்றா'.. பிளஸ் 2வில் தோல்வி.. ஆனால் நீட் தேர்வில் 705 மதிப்பெண் பெற்ற குஜராத் மாணவி!

Gujarat Girl Student NEET Exam Results Issue : குஜராத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ் 2 தேர்வில் பெயிலான நிலையில், நீட் தேர்வில் 720க்கு 705 மதிப்பெண்கள் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை சேர்ந்த மாணவி கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல் பாடங்களில் தோல்வி அடைந்தார்.

NEET Paper Leak : நீட் வினாத்தாள் கசிவு: முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ.. குற்றவாளிகள் எத்தனை பேர்?

NEET Question Paper Leak Case Chargesheet in Patna Court : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பாட்னாவின் கோபால்பூரை சேர்ந்த நிதிஷ்குமார், அமித் ஆனந்த், சிக்கந்தர் யாத்வேந்து ஆகியோர் மாணவர்களிடம் ரூ.30 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாத்தாளை கசிய விட்டது தெரியவந்துள்ளதாக சிபிஐ குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.