K U M U D A M   N E W S

நீதிமன்றம்

வேலை வாங்கி தருவதாக 50 லட்ச ரூபாய் வரை மோசடி... முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக கூறி 50 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவியின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கமா? இல்லயா? என்பது விளக்கமளிக்க காவல்துறைக்கு உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil Nadu Fishermen Fined 1 Crore Rupees: ஒரு மீனவருக்கு ஒரு கோடி அபராதமா? Rameswaram | Sri Lanka

ஒரு மீனவருக்கு 18 மாத சிறை மற்றும் படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம் இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம்

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்தது - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் உள்ள லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

யூடியூபுக்கு புதிய Rules? influencers மீது பாயப்போகும் நடவடிக்கை? ’இனி இதையெல்லாம் பண்ணகூடாது!

யூடியூபில் influencers எனக் கூறிக்கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிவரும் யூ டியூபர்கள் குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறிய கருத்து என்ன? யூடியூப் கிரியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகள் வரப்போகிறதா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

சீமானின் முதல் மனைவி யார்? விஜயலட்சுமியுடன் ரகசிய திருமணம்? சீமானை நெருக்கும் நீதிமன்றம்!

நடிகை விஜயலட்சுமி தான் சீமானின் முதல் மனைவியா என்று சென்னை உயர்நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது, நாம் தமிழர் தம்பிகளை கதிகலங்க வைத்துள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு எதிரான வழக்கு - இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

உச்சநீதிமன்றத்தில் முன்னுரிமை அடிப்படையில் இன்று விசாரணை.

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் – உச்சநீதிமன்றத்தில் முறையீடு

தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முறையீடு.

GOLF மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகள் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

"சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோஃல்ப் மைதானத்தில் நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது"

ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணி.. தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள  கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்து - காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரையில் உள்ள லுாப் சாலையில் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசின் உடனடி நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு

தாது மணல் வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தாது மணல் அள்ளவும், ஏற்றுமதி செய்யவும் விதித்த தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்.

கோவில் நிலத்தில் வணிக வளாகம் டெண்டர் அறிவிப்பு திரும்ப பெறப்படும் - இந்து சமய அறநிலையத்துறை

திருவள்ளுர் பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

சாதி வளர்ச்சிக்கு எதிரானது - உயர்நீதிமன்றம்

சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, வளர்ச்சிக்கு எதிரானது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. ஸ்ட்ரிக்டாக சொன்ன நீதிமன்றம்

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் மனுதாரர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என வாதம்.

பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது- நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பொது அமைதி, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு போராட்டத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம்.. இந்து முன்னணி பேரணிக்கு அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாரத் இந்து முன்னணி அமைப்பு சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திருச்செந்தூர் கோயில் விவகாரம் – ”கடமையை சரியா செய்யுங்க” – நீதிமன்றம் சொன்ன அட்வைஸ்

கோயில் சொத்துகளை பாதுகாக்க ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள் முறையாக கடமையை செய்வதில்லை.. திருச்செந்தூர் கோயிலுக்கு அறநிலையத்துறை செலுத்த வேண்டிய  வாடகை பாக்கி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி - இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தனியாருக்கு பாதுகாப்பு வழங்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு தான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட்டுள்ளது

சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார்... பிப்ரவரி 19-ல் தீர்ப்பு..!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்யக்கோரிய வழக்கை வரும் 19ஆம் தேதி விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாடல்களுக்கு உரிமம் கோரும் வழக்கு.. உயர்நீதி மன்றத்தில் இளையராஜா ஆஜர்

பாடல்களுக்கு உரிமை கோரும் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா நேரில் ஆஜரானார்.

பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

AIADMK Case- மீண்டும் தர்மமே வெல்லும்: O Panner Selvam

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.