#BREAKING || கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர்.
10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதன்படி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும். பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும். பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்
பள்ளிக்கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.
படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.
Cuddalore Mayor Visit Govt School : கடலூரில் பள்ளியை ஆய்வு செய்ய மேயர் சென்ற நிலையில் சுத்தம் செய்யாமல் இருந்த வகுப்பறையை சுத்தம் செய்தார். மேலும் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் முள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆசிரியர் பார்த்திபன் பணியில் இல்லாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன் அனுமதியின்றி சுமார் 8 ஆண்டுகளாக அவர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு சக மாணவிகள் வளைகாப்பு செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோ வைரலானது. இந்நிலையில் பள்ளி ஆசிரியை சாமுண்டீஸ்வரியை பணியிட நீக்கம் செய்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லையில் கல்லூரி மாணவியை இரண்டு பேராசியர்கள் மது அருந்த நள்ளிரவில் செல்போனில் அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
''மதுவின் தீமைகள் குறித்தும், இதனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை குடும்பங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனன என்பதை பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்'' என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் குணமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 5 பேர் கள்ளிப்பால் குடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தார். இந்நிலையில் மாணவர்கள் விளையாட்டுத் தனமாக கள்ளிப்பாலை குடித்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. அதை காண ஏராளமான பள்ளி மாணவர்கள் குவிந்ததால் அவர்கள் சுடும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டனர்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசுப் பள்ளியில் ஆன்மிக போதனை குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மகா விஷ்ணு, வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், எங்கும் ஓடி ஒளியவில்லை, சென்னை வருகிறேன் என ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
ஆன்மிகமா? பகுத்தறிவா? அரசு பள்ளியை சுழன்றடிக்கும் சர்ச்சை, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் கார்ப்பரேட் சொற்பொழிவாளரை கொண்டு ஆன்மிக போதனை நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது.