K U M U D A M   N E W S

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. நீதிமன்றம் உத்தரவு

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழை இழிவுப்படுத்தும் ஒரே கட்சி பாஜக தான்.. முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

தமிழை மதிக்காமல் இழிவுபடுத்தும் மக்கள் விரோத மனப்பான்மையுடன் செயல்படும் ஒரே கட்சியாக பாஜக இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதிய மடல்

இந்தி திணிப்பை எதிர்ப்போம்; இன்னுயிர் தமிழை எந்நாளும் காப்போம் - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல்

முதல்வர் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகள்.. மா.சுப்பிரமணியன் பெருமிதம்

நீரழிவு மருந்துகள் முதல்வர்  மருந்தகங்களில் 11 ரூபாய்க்கும் , மத்திய அரசு நடத்தும் மருந்தகங்களில் 30 ரூபாய்க்கும், தனியார் மருந்தகங்களில் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

அந்த விஷயத்தை முதல்வரை தவிர வேறு யாரேனும் செய்ய முடியுமா? வைரமுத்து கேள்வி

ஒறு கூரையின் கீழ் அனைத்து காட்சி தலைவர்களையும் அமர வைத்தவர்தான் முதல்வர், வேறு யாரேனும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடியுமா? என கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

தமிழக முதலமைச்சர் அப்டேட்டாக இல்லை - தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம்

முதலமைச்சர் அவுட் டேட்டடாக இருக்கிறார் அப்டேட்டாக இல்லை என்று மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

பாஜகவினரை கண்டித்து திமுகவினர் போராட்டம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் -திமுகவினர் எதிர்ப்பு

கொடநாடு வழக்கு: விசாரணைக்காக எஸ்டேட் மேலாளர் நேரில் ஆஜர்!

கொடநாடு வழக்கில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 250 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

அதிமுக நிர்வாகி கன்னத்தில் அறைந்த ராஜேந்திர பாலாஜி-வைரலாகும் வீடியோ!

பொன்னாடை அணிவிக்க வரிசையில் முந்திக்கொண்டு வந்த அதிமுக நிர்வாகியை கே.டி.ராஜேந்திர பாலாஜி அறைந்தார்.

செங்கோட்டையன் நிகழ்ச்சியில் அடிதடி..! பறந்த நாற்காலிகள்... பதறிய மாஜி..! பின்னணியில் எடப்பாடியாரா..?

அதிமுகவில் கலகக் குரல் எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீறும் தலைமை? சீரியஸான மாண்புமிகு? சிதறும் தொகுதிகள்..?

கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்து வருகிறது. இந்நிலையில் ஆறு தொகுதிகளை வைத்திருக்கும் தலைநகர் அமைச்சரிடம் இருந்து 3 தொகுதியை வேறொருவருக்கு கொடுக்க அறிவாலயம் ஐடியா செய்து வருவதாக கூறப்படும் தகவல் ஹைலைட்டாகி உள்ளது.

அதிமுக பொருளாளராகும் ஓபிஎஸ்..? அமித்ஷாவின் 30 நிமிட மீட்டிங்..! விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பு…!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்புக்கு எடப்பாடி பழனிசாமி சம்மத்தித்து விட்டதாகவும், ஆனால் ஒரு முக்கிய டிமாண்டை வைத்து டெல்லி தலைமையை லாக் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?

அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே மோதல்

செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

தமிழுக்கு திமுக செய்தது என்ன? - அண்ணாமலை கேள்வி

எதுவும் இல்லை என்பதாலேயே அடுத்த தலைப்புக்கு முதலமைச்சர் சென்றுவிட்டதாக அண்ணாமலை விமர்சனம்

DMDK Rajya Sabha Seat: அதிமுக - தேமுதிக கூட்டணிக்குள் சலசலப்பு..?

ராஜ்ய சபா சீட் உறுதியாகிவிட்டது - பிரேமலதா விஜயகாந்த்

முதலமைச்சர் முன்மொழிந்த முக்கிய தீர்மானங்கள் - முழு வீடியோ

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பது தொடர்பாக இன்று (மார்ச் 5) அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்தவகையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

தவெக முதல் விசிக வரை.. அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில்..

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறது

குடியரசுத்தலைவரை சந்திக்கும் ஸ்டாலின்?

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக அரசு திட்டம்

தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாடு உரிமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்.. தீர்மானம் நிறைவேற்றம்

Constituency Delimitation : தமிழ்நாடு மற்றும் மாநிலங்களின் தென்னிந்திய அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம்" - CM M.K.Stalin

மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம் திமுக தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்

அனைத்துக் கட்சி கூட்டம்.. தமிழ்நாடு அரசு போட்ட பலே பிளான் இதுதான்!

All Party Meeting in Tamil Nadu : அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களையும் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மு.க.அழகிரி வழக்கு .. நீதிமன்றம் போட்ட உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி

"எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும்தான்" - எடப்பாடி பழனிசாமி சூசகம்

"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு தருவதாக சொல்லவில்லை" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி