K U M U D A M   N E W S

அதிகாலையிலேயே 'Get Out Stalin' என்று பதிவிட்ட அண்ணாமலை

'Get Out Modi' திமுகவினர் ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு 'Get Out Stalin' என்று அண்ணாமலை பதிவிட்டு இருக்கிறார்

கடலூரில் 2 நாட்கள் முதலமைச்சர் கள ஆய்வு..  நெய்வேலியில் ரோட் ஷோ

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வில் ஈடுபடுகிறார்.

கல்வி நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் ரூ. 2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் தேதி அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 25ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்பு

ஈட்டியாக பாயும் ஈரோடு பாலிடிக்ஸ்..? இரிட்டேட் செய்த தோப்பு..! வெடித்த முத்துச்சாமி..!

ஈரோடு திமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பிரஸ் மீட்டிலேயே தோப்பு வெங்கடாசலம் மீது அமைச்சர் முத்துச்சாமி, எரிச்சலைக் கொட்டியது பேசு பொருளாக மாறியுள்ளது. ஈரோடு திமுகவில் நடப்பது? அமைச்சரின் மனநிலை என்ன? தோப்பு வெங்கடாசலம் இதனை எப்படி சமாளிக்கப் போகிறார்? என்பன குறித்து விரிவாக பார்ப்போம்.

ஓங்கியது மூர்த்தியின் கை! ’பெப்பே’ காட்டிய தலைமை? ஓரங்கட்டப்பட்ட பி.டி.ஆர்?

கட்சியை வலுப்படுத்துவதற்காக புதுப் புது மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறது அறிவாலயம். இந்த பட்டியலில், அமைச்சர் பிடிஆரின் பெயர் இடம்பெறவில்லை. மதுரை திமுகவில் இரண்டு முக்கிய புள்ளிகள் வேட்டு வைத்ததே இதற்கு காரணம் என்கிறனர் சில விவரப்புள்ளிகள். அந்த முக்கிய புள்ளிகள் யார்? மதுரை திமுகவில் நடக்கும் பிரச்சனை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

மூன்றாக பிரிந்த விழுப்புரம்..! அப்செட்டில் பொன்முடி...? ராஜினாமா முடிவால் பதற்றம்...!

திமுகவில் திடீரென நிகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் மாற்றத்தால் கடும் அப்செட்டில் உள்ளதாகக் கூறப்படும் அமைச்சர் பொன்முடி எடுத்துள்ள முடிவு மாண்புமிகுகளை பதறவைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பொன்முடி எடுத்த முடிவு என்ன?விரிவாக பார்ப்போம்.

டார்கெட் தலைநகர்..! மா.செ. ஆகும் பிரபாகர் ராஜா? பக் பக்கில் மாண்புமிகுகள்..!

அதிரடியாக மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனங்களை திமுக செய்துவரும் நிலையில், தலைநகரை டார்கெட்டாக வைத்து சில அதிரடி மாற்றங்கள் நிகழ உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு - விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்

5,18,783 விவசாயிகளுக்கு ரூ.498.80 கோடி நிவாரணம்

கத்தி முனையில் வடமாநில பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை– ஏப்ரல் 15 வரை மலையேற தடை

தமிழ்நாட்டில் காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் மலைகளில் சுற்றுலா செல்ல ஏப்.15ம் தேதி வரை தடை விதிப்பு

மும்மொழிக்கொள்கை விவகாரம் – கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தவறு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்- ஆர்.பி. உதயகுமார் பேச்சு

அதிமுக ஆட்சியின் போது தவறு செய்தது ஆண்டவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறோம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

"கோவை சிறுமி முதல்வருக்கு மகள் இல்லையா?"

சிறுமிகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவது வேதனைக்குரியது -அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.. தேதி அறிவிப்பு

வரும் 24-ம் தேதி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு.

ஹேய் Wide இல்லப்பா... Cricket parithabangal ft மேயர் பிரியா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி

”OPS தான் பதவி ஆசையால் அப்படி செய்தார்”– RB Udayakumar

அதிமுக ஒற்றுமைக்கு யாரும் தடையாக இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

நடுங்க வைத்த பழவந்தாங்கல் ரயில் நிலைய சம்பவம்.. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் மர்ம நபர், பெண் காவலரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றிய சம்பவத்தின் எதிரொலியாக ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதிகரிக்கும் **லியல் வன்கொடுமை.... சென்னையில் வெடித்த போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக மாணவரணி சார்பாக கண்டன ஆர்பாட்டம்.

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. அண்ணாமலை கண்டனம்

கோவையில் 17 வயது சிறுமியை ஏழு மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். 

தமிழ்.. தமிழ்.. என பேசுகிறார்களே தவிர எதையும் செய்யவில்லை.. ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமிழ்.. தமிழ்.. என்று 60 ஆண்டுகளாக பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எதையும் செய்யவில்லை என்றும் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் இயங்கி வரும் நிலையில் ஒன்றில் கூட பாரதியார் இருக்கை இல்லை என்றும் ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

6 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கு தேவையான ஆறு கோடி பாமாயில் பாக்கெட்டுகள் மற்றும் 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஆகியவற்றை கொள்முதல் செய்ய  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஒப்பந்தம் கோரி உள்ளது. 

மார்ச் 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்.. வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி.. ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

மார்ச் 15-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்..? வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சமீபத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழக பட்ஜெட் வரும் மார்ச் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.