ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.22-ம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாட்டையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு பாகிஸ்தான் உடனான ‘சிந்து நதி நீர்’ ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் விமானங்களுக்கு தடை விதித்து வான்வெளியை மூடியது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்தியாவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தானும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
விளையாட்டில் வெடித்த மோதல்
இந்தியா-பாகிஸ்தான் மோதலானது கிரிக்கெட் தொடரிலும் வெடித்துள்ளது. அதாவது, இந்தியாவில் நடைபெறும் ஐபில் சீசன் போன்று பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை இந்தியாவில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் ஒளிப்பரப்பி வருகின்றன.
கிரிக்கெட் தொடர் ஒளிபரப்பு நிறுத்தம்
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து PSL தொடரை இந்தியாவில் ஒளிபரப்பும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி நிறுவனங்கள் போட்டிகள் ஒளிப்பரப்புவதை நிறுத்தியுள்ளன. இந்த நடவடிக்கையானது நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சூழலில், இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, PSL தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான வேலைகளில் இந்தியாவைச் சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படும் எனில் இந்தியர்கள் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.