ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா சென்றவர்கள் சுற்றிவளைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பஹல்காமின் பைசரன் புல்வெளியின் அழகை ரசித்துக்கொண்டிருந்த வேளையில் தான், அப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வந்த தீவிரவாதிகளை பார்த்த சுற்றுலா பயணிகளை ஆளுக்கு ஒருபுறம் சிதரியடித்து ஓடி ஒளியத் தொடங்கினர். அப்போது அங்கு தனது குடுமபத்துடன் சென்றிருந்த அசாமை சேர்ந்த பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சாரியா என்பவரும் மரத்தின் பின்னால் ஒளிந்துள்ளார்.
அப்போது, சுற்றுலா பயணிகளை துரத்தி பிடித்த தீவிரவாதிகள், அவர்களிடம் ’நீ முஸ்லீமா? குரானில் உள்ள முதல் கல்மாவை சொல்’ என கேட்டுள்ளனர். கல்மா என்பது இஸ்லாமின் அடிப்படை கொள்கையாகும். அல்லா மீதான நம்பிக்கையை விவரிக்கும் வரிகளே கல்மா. ஆனால் அங்கிருந்த இந்து சுற்றுலா பயணிகளுக்கு இந்த கல்மா தெரியவில்லை என்பதால், அவர்களை நெத்திபொட்டில் சுட்டுக்கொன்றனர் அத்தீவிரவாதிகள்.
இப்படி ஒருவர் பின் ஒருவராக துப்பாக்கி முனையில் உயிரிழந்ததை பார்த்த தேபாஷிஷ் பட்டாச்சாரியாவின் மனைவி மதுமிதா, தனது நெத்தியில் வைத்திருந்த குங்குமத்தை அழித்து, கையில் இருந்த வளையல்களை கழற்றி, இஸ்லாம் பெண் போல தன்னை சித்தரித்துக்கொண்டார். இதன்பின்னர் தேபாஷிஷை நோக்கி வந்த தீவிரவாதிகள், அவர் யார் என்ற கேள்வியை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காத தேபாஷிஷ், முதல் கல்மாவின் ”லா இலாஹ இல்லல்லாஹ், முகமது ரசுல்லா” என்ற வரியை கூறியிருக்கிறார். இதனைக்கேட்டதும் தீவிரவாதிகள் தேபாஷிஷ்-ஐ ஒன்றும் செய்யாமல் விட்டுச்சென்றுள்ளர்.
ஆனால், தேபாஷிஷ் ஒரு இந்து எனவும், அவருக்கு இஸ்லாமிய வேதம் குறித்த ஞானம் இருந்தது எனவும் அங்கிருந்த தீவிரவாதிகளுக்கு தெரியாது. இதனால் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பித்து ஜம்முவில் வசிக்கும் குடும்பத்தினர் ஒருவரின் உதவியோடு காடு மலைகளை தாண்டி, ஒரு வழியாக இந்த சுற்றுலாவுக்கு வழிகாட்டிய நபரை தேடிபிடித்துள்ளார். பின்னர் அவர்களின் உதவியால் ஸ்ரீநகரில் வந்திறங்கி வீடு திரும்பியுள்ளனர்.
இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக, தேபாஷிஷ்-ன் தைரியத்தையும், அவரது அறிவுத்திறனையும் பலரும் பாராட்டி வருகின்றனர்..