K U M U D A M   N E W S
Promotional Banner

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியில் பின்தங்கியிருக்கும் தமிழகம்.. அண்ணாமலை விமர்சனம்

கிராமத்தில் உள்ள மாணவ, மாணவியர், கல்வி கற்பதற்காக, பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது என்பது, விளம்பர ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் தமிழகம் எத்தனை பின்தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் விஜய்... தவெக செயற்குழுக் கூட்டத்தில் 20 தீர்மானகள் நிறைவேற்றம்

2026 தேர்தலில் தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும் கூட்டணி குறித்து விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரந்தூர் மக்களுடன் முதலமைச்சரை சந்திப்பேன்: விஜய் பேச்சு

“பரந்தூர் விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்தித்து பேச வேண்டும், இல்லை என்றால் பரந்தூர் விவசாயிகளை அழைத்துக்கொண்டு நானே நேரில் சென்று சந்திப்பேன்" என விஜய் தெரிவித்துள்ளார்.

‘SORRY’ என்பது தான் உங்கள் பதிலா? எடப்பாடி பழனிசாமி காட்டம்

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம்” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

காவலாளி அஜித்குமார் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றி முதல்வர் உத்தரவு..!

திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

“ரொம்ப SORRY மா..” அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற முயற்சியா? அண்ணாமலை கேள்வி

காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறை உயர் அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

காவலாளி அஜித் குமார் மரணம்: தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

சிவகங்கை அருகே கோயில் காவலர் அஜித்குமார் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக வரும் 3ஆம் தேதி தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கண்ணியத்தோடு நடந்துகொள்ளுங்கள்.. காவல்துறைக்கு முதல்வர் அறிவுரை

“கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

திருப்புவனம் விவகாரம்: முதல்வருக்கு நயினார் 9 கேள்விகள்..!

சிவகங்கை அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

லாக்அப் இறப்புகள் வேதனை அளிக்கிறது.. செல்வப்பெருந்தகை

லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனை அளிப்பதாகவும்,. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் அமைச்சர்.. கடலுக்கு செல்லும் காவேரி நீர்.. விவசாயிகள் சங்கம் கண்டனம்

வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிநாட்டில் இருப்பதால் மயிலாடுதுறை - கடலூர் மாவட்டங்களில் காவிரி நீரை பாசனத்திற்கு திறக்காமல் கடலுக்கு திறந்து விட்டுள்ளதாக நீர்வள ஆதாரத்துறைக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் உயிருக்கு பாதுகாப்பு இல்லை.. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

“திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் நலனில் முதல்வருக்கு அக்கறை இல்லை.. அன்புமணி குற்றச்சாட்டு

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்தில் முதல்வர் கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்வதாகவும், மீனவர்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவை தோற்கடிக்கப் புறப்படும் தமிழ்நாடு.. தமிழிசை சௌந்தரராஜன்

தமிழர்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் திராவிடமாடல் அரசுக்கு எதிராக தமிழ்நாடு மக்கள் பேரணியாக திரளப் போவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு வழங்கும் உணவில் அலட்சியம் ஏன்?.. நயினார் நாகேந்திரன் கேள்வி

“தேசியக் கல்விக் கொள்கையில் உள்ள காலை உணவு திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டினால் மட்டும் போதாது, அதை முறையாகவும் செயல்படுத்த வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தாமதமான அங்கீகாரமே இது.. கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பு பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணா பெயரை உச்சரிக்க அருகதை இருக்கிறதா?.. இபிஎஸ் காட்டம்

குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டாம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவலர்கள் பதவி உயர்வு.. புதிய அரசாணை பிறப்பிக்க திருமாவளவன் வலியுறுத்தல்

2002 முதல் பணியில் சேர்ந்த காவலர்கள் பதவி உயர்வு பெற புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்.. தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

"தமிழகத்தில் நடக்கும் சமூக விரோத நடவடிக்கைகள் மாய்ந்து போக, முருகனின் வேல் எங்களுக்கு உதவி செய்யும்" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

'முதல்வர் மருந்தகம்' அல்ல.. 'முதல்வர் மாவகம்'- அண்ணாமலை விமர்சனம்

அடிப்படைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், முதல்வர் மருந்தகங்களில் தற்போது மாவு விற்பனை செய்யும் நிலைக்குத் மருந்தக உரிமையாளர்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன?.. அன்புமணி கேள்வி

தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை என்று அமைச்சரின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.