மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.7,160க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.57,280க்கு விற்பனையாகிறது.
கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு.
சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா செல்போன் கடை உரிமையாளர் வீட்டில் சோதனை.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
சென்னை தத்தளிக்க யார் காரணம்? அதிமுக + பாஜக vs திமுக
ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலெர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதால் இன்று (அக். 17)) சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று (அக். 17) விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கி கொள்ளப்பட்டதாக அறிவிப்பு!
சென்னையில் மழையால் பாதித்தவர்களுக்கு உதவ மெகா ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளில் கார்ப்பிணி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தல்.
வானிலை முன்னறிவிப்புகள் மேலும் துல்லியமாக இருக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் திருவள்ளூர் மாவட்டம் அயப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர் மழை காரணமாக தமிழக வெற்றிக் கழக மாநாட்டு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.
திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.
வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.