சென்னைக்கு மீண்டும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரத்தில் 18 வயது இளம்பெண் உட்பட இரண்டு பெண்களை மர்ம கும்பல் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான இன்று (நவ. 24), கடைஞாயிறு விழா மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் உரிய சிகிச்சியின்றி நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் - வந்தவாசி செல்லும் சாலையில் லாரி பழுதாகி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல்.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் நசரத்பேட்டை அருகே பேருந்தில் பெண் பயணியிடம் ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு.
காஞ்சிபுரம் கூத்திரமேடு பகுதியில் டாடா ஏஸ் வாகனத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் கொட்டும் மழையில் நெடுஞ்சாலைத்துறையினர் தார் சாலை அமைத்து வருகின்றனர். மழை பெய்யும்போது தார் சாலை அமைத்தால் எப்படி தரமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறைக்கு பின்னர் சாம்சங் நிறுவன ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சுங்குவார்சத்திரத்தில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து 500 மீ தொலைவில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் சாம்சங் ஊழியர்கள் 2 பேருக்கு நீதிமன்றக் காவல்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சாம்சங் தொழிலாளர்களுக்கு இன்று ஆதரவு தெரிவிக்க இருந்த நிலையில் கைது
காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக வரும் 5ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., கூட்டாக அறிவித்துள்ளன.
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் சாம்சங் ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு சமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவு காரணமாக 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்யப்பட்டார் என்று, உறவினர் கூறும் ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி உண்டாக்கி உள்ளது.
காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.