தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டங்களில் கனிமொழி எம்.பி கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.
மும்மொழி தெரிந்தால்தான் தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு என்கிற திமுக அரசின் மறைமுக இந்தி திணிப்பு நடவடிக்கைகள் யாவும், தமிழ் மண்ணில் இன்னொரு மொழிப்போருக்கே வித்திடும் எனவும், அந்தத் தீயில் திராவிடம் செய்யும் துரோகங்கள் யாவும் மொத்தமாய் எரிந்து சாம்பலாகும்
வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க வீட்டு மனைகளுக்கு ஒப்புதல் தந்ததில் எழுந்த முறைகேடு புகார் தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது
தமிழ்நாடு அரசே முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தல். அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க மதுவை ஒழிப்போம், மனிதவளம் காப்போம் என X தளத்தில் ஆதவ் அர்ஜுனா பதிவு
ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் தேவரா வசூல் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கலெக்ஷன் முதல்நாளை விட இரண்டாவது நாளில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Devara Box Office Collection Worldwide Day 1 : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்தப் படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Meiyazhagan Box Office Collection Day 1 : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார் செந்தில் பாலாஜி. இந்த சந்த்பிப்பு குறித்து, ”பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜிக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்!” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ராமநாதபுரம் - திருவாடனை தாலுகா தொண்டியில் உள்ள தொடக்கப் பள்ளியை இடித்து அப்புறப்படுத்தக்கோரி உச்சநீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளி கட்டிடத்தை 12 வாரத்திற்குள் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.