Cyclone Fengal Update : நகரும் தாழ்வு மண்டலம்.. எப்போது கரையை கடக்கும்? வெளியான வானிலை அப்டேட்
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
நாகூர் முதல் கோடியக்கரை வரையிலான கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுகிறது
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது
காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கிறது.
சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் இல்லாததால் வலுவடையவில்லை என்றும், அதன் காரணத்தால் மழை இல்லை என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20-ஆம் தேதிக்கு பிறகு புயல் சின்னம் மீண்டும் உருவாகுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் கார்களை மேம்பாலத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.
மீண்டும் நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கனமழை எச்சரிக்கையால் சென்னை ராயபுரம் மேம்பாலத்தில் கார்களை நிறுத்தி வைத்துள்ள பொதுமக்கள்
மீன்பிடிக்கச் செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை
நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை மற்றும் அதன் புறநகரில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான்
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இலங்கையை புரட்டிப்போட்ட கனமழை... கிளிநொச்சியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
ஃபெங்கல் புயலை எதிர்கொள்ளும் வகையில் சென்னை காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக உதவி ஆணையர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியாக கடலூர் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம்
சில மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரத் தொடங்கியது
நாகையில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
Fengal Cyclone: மீட்பு பணி - தயார் நிலையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் - AC ஜெகதீசன்
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்