K U M U D A M   N E W S

Tamil

20 பேர் பலி.. 35 பேர் பாதிப்பு - வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி?

Chandipura Virus : தமிழ்நாட்டில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரியில் தொடரும் கனமழை... அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

Tamil Nadu Weather Update : தமிழ்நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட அதன் சுற்றுப்புற பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதேநேரம் நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழையால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸுக்கு டிமிக்கி.. ஆற்றில் குதித்த மூவருக்கு கால் முறிவு.. நாதக நிர்வாகி கொலையில் திருப்பம்..

NTK Balamurugan Murder Case : 4 சென்ட் இடம் 20 லட்சம் மதிப்புள்ள சொத்துப்பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

தமிழ்நாட்டில் 'ஜெட்' வேகத்தில் டெங்கு.. 7 நாளில் 568 பேர் பாதிப்பு.. அரசின் நடவடிக்கை என்ன?

Dengue Fever Spread In Tamilnadu : டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 சென்ட் இடம்.. 20 லட்சம் ரொக்கம்... நாதக நிர்வாகி கொலை - சிறார் உட்பட 6 பேர் கைது

Naam Tamilar Katchi : 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியதை கண்டதும், பாலமுருகன் கதறிய படி உயிரை காப்பாற்றுங்கள் என ஓடியுள்ளார்.

நாதக பிரமுகர் கொலைக்கான காரணம் என்ன? - 4 பேரை கைது செய்து போலீஸ் விளக்கம்

NTK Balamurugan Murder Case : பாலமுருகன் கொலையானது இரு தரப்பினருக்கு இடையே சொத்தை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட பிரச்சனையால் நடைபெற்றது என விளக்கம் அளித்துள்ளது.

நாதக நிர்வாகி படுகொலையில் திடீர் திருப்பம்.. உறவினரே கூலிப்படை வைத்து கொன்றது அம்பலம்...

NTK Balasubramanian Death in Madurai : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே, பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கட்டண உயர்வு: தேர்தல் வெற்றிக்கு திமுகவின் பரிசு.. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சாடல்!

''விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம் மக்களை முட்டாள்களாக்கி அவர்களின் முதுகில் அரசு குத்தியிருக்கிறது. விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசு தான் இந்த கட்டண உயர்வு''

மின்கட்டணம் உயர்த்தப்பட்டது ஏன்?.. அடுக்கடுக்கான காரணங்களை பட்டியலிட்டு மின்வாரியம் விளக்கம்!

'தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த வழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது' என்று மின்வாரியம் கூறியுள்ளது.

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகம்.. ஒன்று திரண்ட தமிழகம்.. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிக்கும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன. அதிமுகவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

யாருக்கெல்லாம் மின்கட்டண உயர்வு? 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தமா?.. மின்வாரியம் விளக்கம்!

''குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலம் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்படும் வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்''

மதுவிலக்கு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது... என்னென்ன தண்டனைகள்?... முழு விவரம்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கக்கூடிய குற்றங்கள், பிணையில் விடுவிக்க முடியாத குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சட்டத் திருத்தத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் எளிதில் பிணையில் வெளியில் வரமுடியாதவாறு கடும் சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

கருணாநிதியை சண்டாளன் என கூறுவதா?... சீமான் மீது காவல் ஆணையரிடம் புகார்...

கருணாநிதியை புனிதர் ஆக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதியின் அரசியல் வருகைக்குப்பின், தீய சக்தியின் ஆட்சியும் துவங்கியது.

Indian 2: குதிரையில் வந்த கூல் சுரேஷ்... அனுதாபம் தெரிவித்த கமல்... இந்தியன் 2 அட்ராசிட்டிஸ் லோடிங்

கமலின் இந்தியன் 2 இன்று வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தை பார்க்க கூல் சுரேஷ் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு தினமும் 1 டிஎம்சி நீர்... கர்நாடக அரசு இன்று காவிரியில் தண்ணீர் திறக்குமா..?

ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி கர்நாடக அரசு இன்று முதல் தமிழ்நாட்டிற்கு காவிரி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடவுள்ளது.

”அரசு திட்டமிட்டு கொலை செய்ய பார்க்கிறது..” விடுதலையான சாட்டை துரை முருகன் திமுக மீது பாய்ச்சல்!

விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி அவதூறாக பேசியதாக கைதானார். இதற்க கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சாட்டை துரைமுருகனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு கவுரவம்... அரசு பள்ளிகள் புறக்கணிப்பு... - ஆசிரியர்கள் வேதனை

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சி சாட்டை துரைமுருகன் அதிரடி கைது... என்ன வழக்கு?... முழு விவரம்!

விக்கிரவாண்டி தொகுதியில் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கருத்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதுக்கு ஒரு விடிவுகாலமே இல்லையா?.. புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மீனவர்கள் கைது செய்யப்படும்போதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் மாறி, மாறி கடிதம் எழுதிக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்களே தவிர, இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட இதுவரை எந்த நிரந்தர நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

'2026 டார்கெட்'.. 'இளைஞர்கள் பலம்'.. எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. நிர்வாகிகளிடம் பேசியது என்ன?

''கட்சியை வலுப்படுத்த வேண்டும். மாதம் இருமுறை மாவட்ட அளவில் ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். இளைஞர்களை அதிகளவில் கட்சியில் சேர்த்து அவர்களுக்கும் முக்கிய பொறுப்புகளில் வாய்ப்பளியுங்கள்''

66 பேர் உயிரிழந்தும் திருந்தாத விக்கிரவாண்டி.. கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறையும்,புதுச்சேரி காவல்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கள்ளச்சாராயத்தின் தீமை குறித்து மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

4,500 பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை... இதுதான் அரசின் சாதனையா?... ராமதாஸ் கடும் தாக்கு!

''தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியம் தான் காரணம் ஆகும். கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்''

ரூ.1 கோடி கேட்டு ஆர்.எஸ்.பாரதி மீது அண்ணாமலை மானநஷ்ட வழக்கு... 'சும்மா விடமாட்டேன்' என ஆவேசம்!

''மானநஷ்ட வழக்கை கடைசி வரை எடுத்து சென்று ஆர்எஸ்.பாரதியை கண்டிப்பாக சிறைக்கு அனுப்புவோம். பயம் காரணமாக அவரை யாரும் எதிர்த்து பேசுவதில்லை''

புதிய மருத்துவக் கல்லூரிகள் இல்லை.. கைவிரித்த தமிழ்நாடு அரசு... என்ன காரணம்?

கடந்த அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் 60% நிதி பங்களிப்புடன், மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த விதிமுறையை தற்போது மத்திய அரசு மாற்றி விட்டதாக கூறப்படுகிறது.