K U M U D A M   N E W S

Tamilnadu

‘வாழ்விழந்த மீனவர்கள்.. 40 எம்.பி.க்கள் எங்கே?’..எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

''தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை. தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் ஸ்டாலின், தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா, பசுமைவெளி!

சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

செப்.27-ல் பிரதமருடன் முதலமைச்சர் சந்திப்பு

சமக்ரா சிக்ஷா நிதி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 27ம் தேதி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!

Seeman Praised Nandhan Movie : ''கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் வைத்திருந்தால் அபராதம்.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம், வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கொடைக்கானலில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்களில் அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

'அரசியலில் முதல் படி.. எதிரிகள் தவிடுபொடி'.. சமூகவலைத்தளத்தில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

தவெக மாநாட்டு தேதியை விஜய் அறிவித்த அடுத்த நொடி முதல் எக்ஸ் தளத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தவெக மாநாடு குறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

#BREAKING | மகாவிஷ்ணு விவகாரம் - முக்கிய அதிகாரிக்கு அதிரடி உத்தரவு

மகாவிஷ்ணு விவகாரம் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் பணியிட மாற்றம்.

Live : Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

Tamilisai Soundararajan Press meet : தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

’ஆத்தி.. என்ன இந்த வெயில் அடிக்குது...' தமிழக மக்களை வஞ்சிக்கும் சூரியன்

தமிழ்நாட்டில் கோடை காலத்தை தாண்டி செப்டம்பர் மாதத்திலும் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 12 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

உத்தரகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள்! இன்று தமிழ்நாடு திரும்புகின்றனர்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள். பத்திரமாக மீட்கப்பட்ட 30 தமிழர்கள்

சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றுகிறார்’.. அன்புமணி ஆவேசம்.. என்ன விஷயம்?

''முதல்வர் ஸ்டாலின் வன்னிய சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து கொண்டிருக்கிறார். இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க முதல்வருக்கு மனது கிடையாது'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து அவதூறு.. மருத்துவர் காந்தராஜ் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

சில நாட்களுக்கு முன்பு ஒரு யூ-டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மருத்துவர் காந்தராஜ், நடிகைகளை மிகவும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது நடிகையும், விசாகா கமிட்டி தலைவருமான ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையம் வழியாக புகார் அளித்தார்.

மசூதி உள்ள பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்... இந்து முன்னணி அமைப்பினர் கைது

அடுத்த முறை ஊர்வலம் நடத்தியே தீருவோம்- இந்து முன்னணி அமைப்பு.

'கண்டேன் அன்பு முகங்களை’.. அமெரிக்க பயண அனுபவங்களை பகிரும் முதல்வர் ஸ்டாலின்.. நெகிழ்ச்சி!

''விமான நிலையத்தில் கிடைத்த அன்பான - மகிழ்வான வரவேற்பைப் பெற்றுக்கொண்ட பின், சான் பிரான்சிஸ்கோவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் பல நடந்த பெருமை கொண்ட ஹோட்டல் ஃபேர்மாண்ட்டில் தங்கினேன்''

விநாயகர் சிலை ஊர்வலம் – அலங்காரத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்

விநாயகர் சிலை ஊர்வலம் – அலங்காரத்தில் ஜொலிக்கும் பிள்ளையார்

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் இஸ்லாமியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் பரபரப்பு

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம்.

சென்னையில் கரைக்கப்பட்ட 900 விநாயகர் சிலைகள்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட சிலைகள் கரைப்பு.

தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழை கொட்டப்போகுது.. சென்னையில் எப்படி? முழு விவரம்!

தமிழக கடலோரப்பகுதிகளில் 15.09.2024 மற்றும் 16.09.2024 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

திருமாவளவன் விவகாரம்: 'எல்லாம் அவர் பார்த்துப்பார்’.. சேகர்பாபு பதில்!

''முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 101 கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது'' என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.